தருமபுரி, டிச.28- அரூரில் வாக்குகள் எண்ணும் மையத்தில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டுள்ளனர். அரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 34 கிராம ஊராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக் கான தேர்தல் வெள்ளியன்று (டிச.27) நடைபெற்றது. இதையடுத்து, வாக்குப் பெட்டிகள் அனைத்தும் அரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளா கத்திலுள்ள வாக்குகள் எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இம் மையத்தில் காவல் ஆய்வாளர், 3 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள், வெடி குண்டு கண்டுபிடிப்பு மற்றும் செய லிழப்பு பிரிவைச் சேர்ந்த காவலர்கள், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் உள்பட 40 காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள னர். மேலும் வாக்குகள் எண்ணும் மைய வளாகத்தில் 32 கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப் பாட்டு அறையில் 24 மணி நேரமும் கண் காணிப்பு பணியில் காவல் துறை யினர் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண் ணும் மையத்துக்கு வருகை தரும் முக வர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்டோர் செல்லிடப்பேசி எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை தினத்தில் பொதுமக்களின் வாகனங்கள் நிறுத்து வதற்காக அரூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் இடம் ஒதுக் கப்பட்டுள்ளது. அதேபோல், தேர்தல் முடிவுகளை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக ஒலிபெருக்கி வசதி கள் செய்யப்பட்டுள்ளன.