tamilnadu

img

தருமபுரியில் ஆகஸ்ட் 10, 11ல் கூட்டுறவு ஊழியர் மாநாடு

தருமபுரி, ஜூன் 9- தமிழ்நாடு அரசு கூட்டுற வுத்துறை ஊழியர் சங்க மாநில  14 வது பிரதிநிதித்துவ மாநாடு  வரவேற்புக்குழு அமைப்பு கூட்டம் தருமபுரி சிஐடியு அலுவல கத்தில் நடைபெற்றது. இக்கூட் டத்திற்கு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.பழனியம்மாள் தலைமை வகித்தார்.  வரவேற்புக்குழு தலைவராக எம்.சுருளிநாதன், செயலாளராக ஜி.பழனியம்மாள், பொருளாள ராக பி.சி.குமார் ஆகியோர் தேர்வு  செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில், மாநிலத் தலைவர் எம்.சௌந்தரராஜன், மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராசு, மாநில துணைத் தலைவர்கள் சோ.பத்மா, செல் லையா, சிவக்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன், மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், பொருளாளர் கே.புகழேந்தி, பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர்  எம்.சிவப்பிரகாசம், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.நாகரா சன், பிஎஸ்என்எல்இயூ மாவட்டச்  செயலாளர் பி.கிருஷ்ணன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச்  செயலாளர் சி.காவேரி, ஊரக  வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ருத்ரையன், பொது நூலகத்துறை அலுவலர்  சங்க மாவட்டத் தலைவர் முனி ராஜ், கால்நடை ஆய்வாளர் சங்க  மாவட்டச் செயலாளர் சி.அழகிரி மற்றும் பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்டச் செய லாளர் நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டுறவுத்துறையிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். துணைப் பதிவாளர் நேரடி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். சுருக்கெழுத்து, தட்டச்சர் நிலை 3-க்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். புதிய திட்டங்களுக்குப் புதிய  பணியிடம் உருவாக்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மாநில பிரதிநிதித்துவ 14 வது மாநாடு ஆகஸ்ட் 10,11 ஆகிய தேதிகளில் தருமபுரி டி.என்.சி மஹாலில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.