தருமபுரி, பிப். 17- மத்திய அரசின் மக்கள் விரோத பட் ஜெட்டை கண்டித்து இடதுசாரி கட்சியின் சார்பில், தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு திங்களன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.தேவராசன் தலைமை வகித்தார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் காசி தமிழ்குமரன் ஆகி யோர் கலந்து கொண்டு கோரிக்கையை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து ஆவேச முழக்கமிட்டனர்.