தருமபுரி, ஜன. 27- தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மற் றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசி ரியர் கழகத்தின் மாவட்ட பேரவை கூட்டம் தருமபுரியில் நடைபெற் றது. மாவட்ட தலைவர் பெ.துரை ராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மாய கிருஷ்ணன், புவனேஷ்வரன், கண்ணையன், மாவட்ட செயலா ளர் ச.கவிதா ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.
தீர்மானங்கள்
ஆசிரியர்களின் வாழ்வாதா ரத்தை பாதிக்கும் சிபிஎஸ் திட் டத்தை ரத்து செய்து பழைய பென் சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குழந்தைகளின் மனதை பாதிக்கும் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறையை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும். ஆசிரியர்களுக் கும், மாணவர்களுக்கும் பாதகமா னதாக இருக்கும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக்கூ டாது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆரோக் கியமான வகுப்பறை, காலிப்பணி யிடங்களை நிரப்புதல், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத் தவேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு
மாவட்ட தலைவராக பெ. துரைராஜ், மாவட்ட செயலாள ராக ச.கவிதா, மாவட்ட பொருளா ளராக பி.பழனிசாமி உள்ளிட்ட 14 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.