தருமபுரி, ஜன.11- நார்த்தம்பட்டி மகளிர் சுகாதார வளாகத்தை பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள நார்த் தம்பட்டி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள பெண்களுக் காக 15 வருடங்களுக்கு முன்பு மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பெண்கள் பயன்படுத்தி வந்தனர். காலப்போக் கில் முறையான பராமரிப்பு இல்லாததால் சுகாதார வளா கம் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இத னால் தற்பொழுது வரை மகளிர் சுகாதார வளாகம் கேட் பாரற்று பயனற்ற நிலையில் உள்ளது. எனவே மகளிர் சுகா தார வளாகத்தை பராமரஙதது பொதுமக்களின் பயன் பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என மாவட்ட நிர்வா கத்தை அப்பகுதிமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.