தருமபுரி, மே 28 - தருமபுரி, ரெட்டியூர் கிராமத்தில் உள்ள புது ஏரியினை ஆக்கிரமிப் பிலிருந்து அகற்றி தூர்வாருமாறு அக்கிராம மக்கள் வலியுறுத்தியுள் ளனர். தருமபுரி மாவட்டம், பாலக் கோடு ஒன்றியத்திற்குட்பட்ட எர் ரணஹள்ளி ஊராட்சியில் உள்ள ரெட்டியூர் கிராமத்தில் உள்ள புது ஏரி கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. புதுஏரி மூலம் சுற்றுவட்டாரத்தில் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி அடைந்து வருகிறது. இந்நிலையில், பல வருடங்களாக ஏரிக்கரை பழுது அடைந்தும், ஏரியில் ஆங்காங்கே விரிசல் ஓட்டை விழுந்துள்ளதால் கோடை மற்றும் பருவ மழைக்காலங்களில் போதுமான மழை நீரை சேமிக்க முடியாமல் மழைத்தண்ணீர் வழிந்து ஓடி விடுகிறது. இதனால் இப்பகுதி யில் கடும் வறட்சி நிலவி வருகின்றது. மேலும் ஆயிரம் அடிக்கு கீழ் நிலத்தடி நீர் குறைந்து விட்டதால் விவசாயம் முற்றிலும் பொய்த்துப் போய் உள்ளது.
இதனால், பிழைப்பைத் தேடி விவசாயிகள் வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலத்திற்கு கூலி வேலைக்குச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல ஆண்டு களாக ஏரியை தூர்வாரததால் இப்பகுதியினை அதிக அளவில் ஆக் கிரமிப்பு செய்து விவசாய நிலங் களாக மாற்றப்பட்டுள்ளது. தென் மேற்குப் பருவமழை மற்றும் வட கிழக்குப் பருவமழை காலங்களில் மழை பெய்தாலும், ஏரி பழுது காரண மாக சில நாட்களிலேயே வறண்டு விடுகின்றன. இந்நிலையில், ஏரி பழுது மற்றும் ஆக்கிரமிப்பு குறித்து பலமுறை வருவாய் துறைக்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் புகார் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டினை முன்வைக்கின்ற னர். எனவே மாவட்ட நிர்வாகம் குடி மாரத்துப் பணி மூலம் ஏரி ஆக்கிர மிப்பு மற்றும் ஏரி பழுதை சரி செய்து, தூர்வாரி விவசாயிகளுக்கு பயன் பெரும் வகையில் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என விவசாயி கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.