tamilnadu

img

கல்வி கடன், நீட்தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை தருமபுரி திமுக வேட்பாளர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி

தருமபுரி, ஏப்.11-திமுக ஆட்சி வந்தவுடன் கல்வி கடன், நீட்தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி அளித்தார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.செந்தில்குமார் போட்டியிடுகிறார். இவர் வியாழனன்று தருமபுரி ஒன்றியத்திற்கு உட்பட்ட இலக்கியம்பட்டி, நீயூகாலணி, வி.ஜெட்டிஅள்ளி, வெண்ணாம்பட்டி குடியிருப்பு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குசேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, தருமபுரி நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நிறுததப்பட்ட முதியோர் பென்சன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீண்ட காலம் குடியிருப்போருக்கு வீட்டு மனைப்பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். கல்வி கடன் வழங்கவும், வழங்கிய கல்வி கடனை ரத்து செய்யப்பம், நீட்தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதியளித்தார்.இப்பிரச்சாரத்தில் திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்எல்ஏ துவக்கி வைத்தார். தருமபுரிஒன்றிய செயலாளர் சேட்டு, இலக்கியம்பட்டி ஊராட்சி செயலாளர் காவேரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் என்.கந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளர் ராம துரை, முருகன்உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வேட்பாளருக்கு செல்லும் இடமெல்லாம் மேளதாளத்துடன் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றார்.