tamilnadu

img

தாலிக்கு தங்கம் வழங்க லஞ்சம் பெற்ற பெண் அதிகாரிகள் இருவர் கைது

பென்னாகரம், ஜூன் 19- பென்னாகரம் பகுதியில் தாலிக்கு தங்கம் வழங்க லஞ்சம் பெற்ற சமூக நலத்துறை பெண் அதிகாரிகள் இருவரை லஞ்ச ஒழிப்புப் காவல்துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி பகுதி கருப்பையா நல்லி கிராமத்தைச் சார்ந்த ரங்கம்மாள் மகள் சாந்தாமணி. இவருக்கு கடந்த 12- 9- 2018 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர் சமூக நலத்துறையின் சார்பில் பட் டதாரி பெண்ணிற்கான ரூ.50 ஆயிரம் மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்க வேண் டும் என விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஓராண்டு காலமாக இந்த விண்ணப்பத்தின் மீது சமூகநலத்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து ரங்கம்மாளின் மகன் செல்வ குமார் சமூக நலத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, தனக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே உங்களுக்கான தாலிக்கு தங்கம் வழங்க முடியும் என சமூக நலத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து செல்வகுமார் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளித் துள்ளார். இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் மஞ்சுளா தலைமையில் புதனன்று செல்வ குமாரிடம் ரூ.4 ஆயிரம் கொடுத்து அனுப் பிவிட்டு பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை யினர் மறைந்திருந்தனர். சமூகநலத்துறை அதிகாரிகள் சாந்தா மற்றும் சரோஜா ஆகி யோரிடம் ரூ.4 ஆயிரம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவர் களை கைது செய்தனர்.