தருமபுரி, பிப்.8- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத் தின் 10ஆம் ஆண்டு நிறைவையொட்டி, அரூர் ரவுண்டானா பகுதியில் மனித வளையம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளின் உரிமையை வென்றடுக்க தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் சங்கம் உருவாக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. மாற்றுத்திற னாளிகளின் உரிமைகளுக்காகவும் சலுகை களுக்காகவும் பல்வேறுபோராட்டங்களை நடத்தி வெற்றி கண்டுள்ளது. 10 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு வழங்க அரசு சட்டம் இயற்றவேண்டும் என வலி யுறுத்தி மனிதவளைய இயக்கம் நடை பெற்றது. ஜி.செந்தில்குமார் தலைமை வகித் தார். ஒன்றிய தலைவர்கள் வேடியப்பன், தும்பாராவ், வேலு,வெங்கட்ராமன், தமிழ் செல்வி ,சங்கர், தமீஸ் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.