tamilnadu

img

ட்டுவிட்டர் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி

கலிபோர்னியா,மே 13- சமூக வலைதள நிறுவனமான டிவிட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் இனி எப்போதும் வீட்டில் இருந்தே பணிபுரிய நிறுவனம் அனுமதியளித்துள்ளது. ஃபேஸ்புக், கூகுளின் அல்பபெட் ஆகிய நிறுவனங்கள் இந்த வருட இறுதிவரை  தங்களது ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என அறிவித்துள்ளன. இந்நிலையில் டிவிட்டர் நிறுவனத்தின் ஊழியர்களும் இனி எப்போதும் வீட்டில் இருந்தே வேலை செய்ய அந்நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. அலுவலகம் வராமல் வேலை செய்தாலும் அவர்களுக்கு  வழக்கமான ஊதியமே வழங்கப்படும்.  அலு வலகம் வராமலேயே செய்யக்கூடிய பணி யில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த நடைமுறை பொருந்தும் என்று அந்நிறு வனம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் டிவிட்டர் அலுவலகம் மூடப்பட்டு தற்போது ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வரும் நிலையில் செப்டம்பரில் அலுவலகத்தை திறக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.