மும்பை மற்றும் வசாய் கிழக்குப் பகுதிகளில் உள்ள பெரிய எண்ணெய்க் கிணறுகளை தனியார் மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்பதற்கு மோடி அரசு திட்டம் வகுத்திருப்பது தெரியவந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் வருமானத்தை அதிகரிப்பதற் கான ஆய்வு என்ற பெயரில், பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2018 அக்டோபரில் குழு ஒன்றை அமைத்திருந்தார். அந்த குழுவினர்தான், எண்ணெய் நிறுவனங்களை தனியாருக்கு விற்குமாறு ஆலோசனை வழங்கியதாகவும், மோடி அரசும் தற்போது அதனை ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஓஎன்ஜிசி எண்ணெய்க் கிணறுகளை விற்பதற்கு, தடையில்லா சான்றிதழையும் மோடி அரசு வழங்கியுள்ளது. அரசு நிறுவனமான ஓஎன்ஜிசி-க்கு சொந்தமாக- மும்பை, வசாய் கிழக்கு, பன்னா மற்றும் அசாம் கடல் பகுதிகளில் எண்ணெய்க் கிணறுகள் இருக்கின்றன. உள்நாட்டில் பெறப் படும் எண்ணெய்யில், 95 சதவிகிதம் இதுபோன்ற ஓஎன்ஜிசி கிணறு
களில் இருந்தே எடுக்கப்படுகிறது. 5 சதவிகிதம் ஆயில் இந் தியா லிமிடெட் கிணறுகளில் பெறப்படுகின்றன. இந்நிலையில், மும்பை, வசாய் கிழக்கு, பன்னா மற்றும் அசாம் கடல் பகுதி எண்ணெய்க்கிணறுகளை தனியாருக்கு விற்கும் முடிவு, ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா லிமிடெட் ஆகிய 2 நிறுவனங்களையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவை மோடி அரசுக்கு தங்களின் எதிர்ப்பையும் தெரிவித்துள் ளன.