கடலூர்:
புதுச்சேரியில் ஊரடங்கால் மூடப்பட்ட மதுக் கடைகள் திறக்கப்பட்டதன் எதிரொலி யாக புதுச்சேரியிலிருந்து கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தை இணைக்கும் பல்வேறு சாலைகளை முற்றிலுமாக துண்டித்து காவல்துறையினர் தடுப்பு வேலிகளை அமைத்து உள்ளனர்.இதனால் தமிழகப் பகுதியிலிருந்து புதுச்சேரிக்கு எந்த ஒரு பணிக்கும் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. கடலூரிலிருந்து சோரியாங்குப்பம் வழியாக புதுச் சேரிக்கு செல்லும் சாலைகளை இரும்பு தகடுகளை கொண்டு முழுமையாக மூடி விட்டனர்.அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தையும் புதுவையோடு இணைக்கும் பல்வேறு சாலைகளும் அடைக்கப்பட்டுள் ளது. தமிழக பகுதிகளிலிருந்து புதுச்சேரிக்கு சென்று மது வாங்கி வருவதை தடுப்பதற்காகவே இந்த ஏற்பாடு செய் யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.மேலும், தமிழகப் பகுதியிலிருந்து புதுச்சேரிக்கு கொரோனா பரவலை தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.