கடலூர்
தமிழகத்தில் கொரோனா பரவல் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி 8 எம்எல்ஏ-கள், 3 அமைச்சர்கள், 2 மாவட்ட ஆட்சியர்களை கொரோனா மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது. இதில் சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உயிரிழந்துள்ள நிலையில், ஸ்ரீபெரும்பத்தூர் அதிமுக எம்எல்ஏ பழனி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். மீதி நபர்கள் தனிமை மற்றும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தின் மேற்கு பகுதி நகராக இருக்கும் திட்டக்குடி சட்டமன்ற தொகுதியின் திமுக எம்எல்ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.