tamilnadu

img

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா - 2019 டிரெண்டிங் வாய்ஸ்...

நான்காம் வரிசையில் இறக்கப்படுவதற்காகத்தான் விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டார்.அதனால் அவரை சில போட்டிகளில் நான்காம் வரிசையில் இறக்க வேண்டும்.விஜய் சங்கர் சரியாக ஆடாத பட்சத்தில் அடுத்தடுத்த போட்டிகளில் ராகுலை இறக்கலாம். ஆனால் பயிற்சி ஆட்டத்தில் சதமடித்த காரணத்தைக் கொண்டு விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்காமல் ராகுலை களமிறக்கக்கூடாது.ஐந்தாம் வரிசையில் தோனிக்கு பதிலாக ஜாதவை இறக்க வேண்டும், 6-ஆம் வரிசையில் தோனியையும் அடுத்து ஹர்திக்கையும் இறக்க வேண்டும்.

நான் தேர்வு செய்துள்ள ஆடும் லெவன்
ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), விஜய் சங்கர், கேதார் ஜாதவ், தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, பும்ரா, ஷமி, குல்தீப் யாதவ், சாஹல். 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் அளித்த பேட்டியிலிருந்து...