இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுமா இந்தியா?
மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 7-ஆவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
யார் யாருக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு?
வியாழனன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து (முதல்), ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா (2-வது) ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தோல்வியை ருசிக்காமல் தொடர் வெற்றி நடையுடன் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, கடந்த நிகழ்வுகளை மறந்து மகளிர் உலகக்கோப்பை டி-20 தொடரின் முதல் சாம்பியனான இங்கி லாந்து அணியைக் கவனமாகக் கையாண்டால் மட்டுமே இந்திய அணியின் இறுதிப் போட்டி கனவு பற்றிச் சிந்திக்க முடியும். அதே போல உள்ளூர் ரசிகர்களின் பேராதரவுடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணி இறுதிக்குச் செல்ல சகல வாய்ப்புகள் இருந்தாலும் நடப்பு சீசனில் அபாயகரமான அணியாக வலம் வரும் தென் ஆப்பிரிக்காவைச் சற்று ஜாக்கிரதையாக எதிர்கொண்டால் மட்டுமே அந்த அணியின் இறுதிப்போட்டி கனவு நனவாகும். 4 அணிகளும் வெற்றி என்ற சிந்தனையுடன் களமிறங்கு வதால் வியாழனன்று நடைபெறும் 2 அரையிறுதி ஆட்டங் களும் பரபரப்பாக நடைபெறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இந்தியா - இங்கிலாந்து
நேரம் : காலை 9:30
50% 50%
ஆஸி., - தென் ஆப்பிரிக்கா
நேரம் : மதியம் 1:30
55% 45%
2 ஆட்டங்களும் சிட்னியில் நடைபெறுகிறது.
நேரம் : இந்திய நேரம்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
மிரட்டும் மழை
ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரான சிட்னியில் அடுத்த ஒரு வார காலத்திற்குப் பலத்த மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. இதனால் மகளிர் உலகக்கோப்பை தொடரில் மழையும் களமிறங்கும் என்பதால் அரையிறுதி ஆட்டங்களின் சுவாரஸ்யத்திற்குச் சற்று குடைச்சல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.