கொல்கத்தா:
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் மனைவி ஹஷின் ஜஹான் கடந்த ஆண்டு தனது கணவர் பல பெண்களுடன் தகாத முறையில் உறவு வைத்துள்ளதாகக் கூறி ஷமியின் முகநூல், வாட்ஸ் அப் தளத்தின் அந்தரங்க சாட்டிங் (குறுஞ்செய்தி) விஷயங்களை சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங் செய்தார்.இந்த விவகாரத்தில் முகமது ஷமியின் குடும்பத்திற்கும், ஹஷின் ஜஹானுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. ஷமியின் குடும்பத்தார் தன்னை கொலை செய்ய முயன்றதாகக் கூறி கொல்கத்தாவின் லால்பசார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் அலிப்பூர் நீதிமன்றம் முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி பலமுறை அழைத்தும் ஆஜராகவில்லை. திங்களன்று விசாரணையில் அடுத்த 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகவில்லை என்றால் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ, “குற்றப்பத்திரிகை கிடைக்கும் வரை முகமது ஷமி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டோம்” என்று தெரி வித்துள்ளது.