இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சா ளராகத் திகழ்ந்த ஸ்ரீசாந்த் சூதாட்ட பிரச்சனை யால் தற்போது 7 ஆண்டுகால தண்டனை அனு பவித்து வருகிறார். கேரள மாநிலம் கொச்சியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஸ்ரீசாந்த் வசித்து வருகிறார். சனி யன்று அதிகாலை 2 மணிக்கு ஸ்ரீசாந்த் வீட்டின் முன்பகுதி யில் லேசாக தீப்பிடித்து கரும்புகை கிளம்பியது. காற்றின் வேகம் சற்று அதிகமாக இருந்ததால் வீட்டின் முன்பக்க அறையிலும் தீ பரவியது. ஸ்ரீசாந்த் வீட்டிற்கு அருகிலிருந்தவர்கள் தீய ணைப்பு படையினருக்குத் தகவல் கொடுக்க திருக் காக்கரா மற்றும் காந்திநகர் தீயணைப்பு நிலையங்களி லிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை விரைவாக அணைத்தனர். தீ விரைவாக அணைக்கப்பட்டாலும் முன்பக்க அறை எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் ஸ்ரீசாந்த் மற்றும் அவரது மனைவி, குழந்தைகளுக்கு எவ்வித காயமில்லை. தீ விபத் திற்கான காரணம் குறித்து கொச்சி காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.