tamilnadu

img

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்

ஸ்பெயின் நாட்டின் முன்னணி ஏடிபி டென்னிஸ் தொடரான மாட்ரிட்ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால்,சுவிஸ் வீரர் வாவ்ரிங்காவை எதிர்கொண்டார்.தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால்6-1, 6-2 என்ற நேர் செட்களில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்குமுன்னேறினார். ஞாயிறன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் நடால்,கிரீஸ் நாட்டின் இளம்புயல் டிஸிடிஸிபாஸை எதிர்கொள்கிறார். காலிறுதி வெற்றியுடன் ஏடிபி மாஸ்டர்ஸ் தொடர்களில் 70 முறை அரையிறுதிக்கு முன்னேறிரபேல் நடால் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.