tamilnadu

img

3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி : நியூசிலாந்து அணியில் இஷ் சோதி, டிக்னர் சேர்ப்பு

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணியில் இஷ் சோதி மற்றும் டிக்னர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து - இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் 3-வது போட்டி நாளை மவுண்ட் மவுங்கானுயில் நடக்கிறது. இதற்கான நியூசிலாந்து அணியில் இஷ் சோதி, பிளைர் டிக்னர் சேர்க்கப்பட்டுள்ளனர். டிக்னர் நாளைய போட்டியில் அறிமுகம் ஆக வாய்ப்புள்ளது. இஷ் சோதி முதல் போட்டியில் விளையாடினார். இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிராக விளையாட, 2-வது போட்டியின்போது விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் 3-வது போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.