tamilnadu

img

இந்தியாவைப் பழிவாங்கும் எண்ணம் இல்லை ஆஸி., கேப்டன் பெய்ன் கருத்து

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் போட்டி களைக் கொண்ட தொடரில் பங்கேற்க  இந்த வாரம் இந்தியா வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஜனவரி 14-ஆம் தேதி தொடங்குகிறது. ஆனால் இந்த தொடரைப் பற்றிக் கண்டு கொள்ளாமல் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி-20 உலகக்கோப்பையைத் தொடர்ந்து, அங்கு 4 டெஸ்ட் போட்டி களில் விளையாட உள்ளது. உலகக் கோப்பை தொடரை விட ஆஸ்திரேலியா வீரர்கள் இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை தான் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.  இதற்குக் காரணம் கடந்த ஆண்டு சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி புரட்டி யெடுத்தது மட்டுமில்லாமல் புதிய வர லாற்றுடன் தாயகம் வந்தது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியைப் பழிதீர்க்க ஆஸ்திரேலிய அணி காத் திருப்பதாகச் செய்திகள் வெளியாகி யுள்ளன.  இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் கூறியதாவது : “இந்தியாவுக்கு எதிராக நாங்கள் மோதவுள்ள டெஸ்ட் தொடர் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இந்திய அணியைப் பழிவாங்கும் எண்ணம் இல்லை. அதைக் காட்டிலும் அதிகமான ஆர்வம்தான் இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருடன் இந்திய அணி தொடர் கலந்திருப்பதால் இந்த டெஸ்ட் தொடர் முக்கியத்துவம்பெறும்” இவ்வாறு பெய்ன் தெரிவித்தார்.

லாங்கர் வரவில்லை 

இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே தயார் நிலையில் உள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கருக்கு ஓய்வு வழங்கப்பட்டு மெக்டொனால்டு தற்காலிக தலைமை பயிற்சியாளராகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.