tamilnadu

img

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் கங்குலி அதிரடி பதில்

தீவிரவாத தாக்குதல் பிரச்சனை காரணமாக இந்தியா - பாகிஸ்தான் நாடுகள்  சர்வதேச தொடர்களில் விளை யாடுவதில்லை. கடைசியாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி  2012-ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அதன் பிறகு இரு அணிகளும் உலகக் கோப்பை தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறது.  இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரி யத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்க உள்ள கிரிக்கெட் உலகின் தாதா சவுரவ்  கங்குலி இந்தியா - பாகிஸ்தான் அணி களுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் பற்றிய கேள்விக்கு அதிரடி பதில்  அளித் துள்ளார்.  அதில், “இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் விவகாரம் என் கையில் இல்லை. இந்தக் கேள்வியைப் பிரதமர் மோடியிடமும்,  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடமும் கேட்க வேண்டும். இந்த விவகாரத்தில் அதிக  ஆர்வம் இருந்தாலும் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் இது சர்வதேச விவகாரம். மற்றொரு நாட்டுக்குப் பயணிக்க அரசுகளின் அனுமதி மிகவும் அவசியம் என்பதால் நான் பதில் ஏதும் கூற முடியாது” எனக் கூறியுள்ளார்.