இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் தொட ருக்கான பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. ஞாயிறன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரி யத்திற்கு,”இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆபத்தில் உள்ளதாகவும் கண்காணித்து வருவதாகவும், அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் போலிக் கணக்கி லிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அடுத்த சில நிமிடங்களில் ஐசிசி மற்றும் பிசிசிஐ-க்கு மின்னஞ்சல் மூலம் தகவல் பரிமாற்றம் செய்தது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை யில் இந்திய கிரிக்கெட் வீரர்களைப் பயமுறுத்தும் நோக்கில் செதுக்கப்பட்ட புரளி எனத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் வீரர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்யப் போவதில்லை என்று கூறியுள்ள பிசிசிஐ இது தொடர்பாக, ஆன்டிகுவாவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குத் தகவல் தெரிவித்து மேற்கு இந்தியத் தீவுகள் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தற்போது இந்திய அணிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்படும் பட்சத்தில் மேலும் அதிகப்படுத்தப்படும் என்றும் பிசிசிஐ தரப்பில் தகவல்கள் வெளியாகி யுள்ளன. காஷ்மீர் பிரச்சனையால் இந்திய கிரிக்கெட் அணி தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்ட மிட்டுள்ளதாகத் தொடக்கத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால் புரளி செய்தி என்று பாகிஸ்தான் அரசு மற்றும் பிசிசிஐ சமாளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.