நியூஸிலாந்து மண் ணில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஒருநாள் தொடருக்கு தயாராகி வருகிறது. மூன்று விதமான போட்டி களைக் கொண்ட இந்த தொட ரின் தொடக்க நிகழ்வான 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடரை இந்திய அணி முழுமையாகக் கைப்பற்றி நியூஸிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்து புதிய வரலாறு படைத்தது. இந்த டி-20 தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. இந்த ஆட்டத்தின் ஒரு பகுதியில் நியூஸிலாந்து அணியின் அதிரடி வீரர் ராஸ் டெய்லர் அடித்த பந்து சிக்ஸர் நோக்கி சென்றது. அதாவது அந்த பந்து ஏறக்குறைய சிக்ஸர் தான் என அடித்துக் கூறும் அளவிற்கு எல்லை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.
பவுண்டரி எல்லைக்கு 7 மீட்டர் தூரத்தில் தாண்டி சென்ற பொழுது யாரும் எதிர் பாராத இந்திய அணியின் இளம் வீரர் சஞ்சு சாம்சன் பாய்ந்து பவுண்டரி எல்லை யில் விழாதவாறு அந்த ரத்தில் இருந்தபடியே பந்தை மைதானத்தின் உள்புறம் எறிந்தார். சஞ்சு சாம்சனின் அசத்தலான செயலால் இந்திய அணிக்கு 4 ரன்கள் மிச்சமானது. ஆஸ்திரேலியா, இங்கி லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான் இந்த வகையான துடிப்பான பீல்டிங்கில் ஆர்வமாகச் செயலாற்றுவார்கள். இந்திய வீரர்கள் இதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்பதால் சஞ்சுவுக்கு இந்திய ரசிகர் கள் மட்டுமின்றி கிரிக்கெட் உலகத்தைச் சேர்ந்தவர் களும் பாராட்டுக்கள் தெரி வித்துள்ளனர். 25 வயதாகும் சஞ்சு சாம்சன் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.