tamilnadu

img

தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் பவள விழா

தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் பவள விழா

கோவை, மே 4- தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணனுக்கு பவள விழா ஞாயிறன்று நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணனின் 75 வயது நிறைவை முன்னிட்டு, பெரியாரிய, அம்பேத்க ரிய, மார்க்சிய இயக்கங்கள் சார்பில் பவள விழா ஞாயிறன்று நடைபெற்றது. கோவை மாவட்டம், ஆர்எஸ்.புரம் மாநகராட்சி கலை யரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், புகைப் பட கண்காட்சி, கோவை நிகர் கலைக்குழு வின் பறையிசை, கவியரங்கம், கருத்தரங் கம் மற்றும் பூங்குயில் கலைக் குழுவினரின்  பகுத்தறிவு நாடகம், புதுகை பூபாளம் கலை  உள்ளிட்டவைகள் அரங்கேற்றப்பட்டன. இதையடுத்து நடைபெற்ற வாழ்த்தரங்கத் திற்கு திராவிட தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி தலைமை வகித்தார். தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதை கழக தலைவர் நேருதாஸ் வரவேற்றார். இந்நிகழ்வில் மதி முக பொதுச்செயலாளர் வைகோ, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் இரா.அதியமான், திரைக்கலைஞர் சத்ய ராஜ், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பா ளர் திருமுருகன் காந்தி, தமிழ் புலிகள் கட்சி யின் தலைவர் நாகை.திருவள்ளுவன் உட்பட  பலர் கலந்து கொண்டனர். கு.ராமகிருட் டிணன் ஏற்புரையாற்றினார். முடிவில், வழக் கறிஞர் இ.மு.சாஜித் நன்றி கூறினார்.

ஊரக வளர்ச்சித்துறை சங்க திருவாரூர் மாவட்ட அலுவலகத்தில் சனியன்று, மதுரையில் நடைபெற்ற சிபிஎம் அகில இந்திய மாநாட்டு பேரணியில், பங்கேற்ற செந்தொண்டர்களை பாராட்டி சான்றிதழ்  வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துக் கண்ணன், மாவட்டச் செயலாளர் டி.முருகையன் உட்பட பலர் பங்கேற்றனர்.