tamilnadu

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

விசைத்தறியாளர்களின் வேலைநிறுத்தம் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆதரவு

கோவை, திருப்பூர் மாவட்டங்க ளில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங் கத்தின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு வேட்டி,  சேலை மற்றும் சொந்த ஜவுளி உற் பத்தியாளர்கள் ஆதரவு தெரி வித்துள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டு ஏற் படுத்தப்பட்ட ஒப்பந்த கூலியில் இருந்து குறைக்கப்பட்ட கூலியை முழுமையாக வழங்க வேண்டும், இனிவரும் காலங்களில் கூலியை குறைக்காமல் வழங்கும் வகை யில் சட்டப் பாதுகாப்புடன் புதிய  கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த  வேண்டும், ஜவுளி உற்பத்தியாளர் களை மாவட்ட நிர்வாகம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், ஆண்டுக்கு ஆறு சத வீதம் மின் கட்டண உயர்வை ரத்து  செய்ய வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி விசைத்தறியாளர்கள் ஆர்ப் பாட்டம், கருப்புக்கொடி போராட் டங்களை நடத்தினர். இருப்பினும், அரசு தரப்பில்  எந்த நடவடிக்கையும் எடுக்காத தால், கோவை, திருப்பூர் மாவட்ட  கூலிக்கு நெசவு செய்யும் விசைத் தறி உரிமையாளர்கள் சங்கங்க ளின் கூட்டமைப்பு 19ஆம் தேதி  முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். கூலி உயர்வு கேட்டு போராட் டங்களை நடத்தியும் எந்த முன் னேற்றமும் இல்லை. ஒரு ஆண் டில் பலமுறை பேச்சுவார்த்தை  நடந்தும், ஜவுளி உற்பத்தியாளர் கள் பங்கேற்கவில்லை. இது குறித்து அமைச்சர்கள், ஆட்சியர்க ளிடம் மனு அளித்தும் நடவ டிக்கை இல்லை. கூலி உயர்வு கிடைக்காமல், மின் கட்டண உயர்வை சமாளிக்க முடியாமல் நெருக்கடியில் உள்ள னர். கோவை, திருப்பூர் மாவட்டங் களில் சுமார் 2 லட்சம் விசைத்தறி கள் செயல்பட்டு வருகின்றன. பல் வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் தீர்வு எட்டப்படாததால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக நேரடியாகவும், மறை முகமாகவும் 4 லட்சம் தொழிலா ளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விசைத்தறியாளர்களின் கோரிக்கைக்கு வேஷ்டி, சேலை  மற்றும் சொந்த ஜவுளி உற்பத்தி யாளர் சங்கத்தினர் தார்மீக அடிப் படையில் மார்ச் 24 ஆம் தேதி யன்று முதல் 26 தேதி வரை மூன்று  நாட்கள் ஆதரவு வழங்குவதாக தெரிவித்தனர்.

வனத்துறை நிலங்களை மீட்க விவசாயிகள் கோரிக்கை

உடுமலை வருவாய் கோட் டாட்சியர் குமார் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் பல்வேறு கோரிக் கைகளை முன்வைத்தது. குறிப் பாக, தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள வனத்துறைக்கு சொந்த மான நிலங்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று வலியுறுத் தினர். இதுகுறித்து அவர்கள் அளித் துள்ள மனுவில் தெரிவித்துள்ள தாவது, தேசிய வன உயிரின காப்ப கத்திற்குட்பட்ட தளி கிராமத்திற்கு அருகில் உள்ள ஆனைமலை குன்றுகள் பகுதியில் பல ஏக்கர்  வன நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. மேலும், பழமையான மரங்களை அழித்துவிட்டு தென்னை மரங்களை நட்டுள்ள தாகவும், இதனால் நுண் பல்லுயிர் வாழும் சூழ்நிலைகள் அழிக்கப் பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள தண்ணீர் ஓடைகளை அடைத்து திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆக்கிரமிப்பு செய்தவர் கள் மீது கடுமையான நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றும், ஆக்கிர மிக்கப்பட்ட நிலங்களை உடனடி யாக மீட்க வேண்டும் என்றும் அவர் கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், தென்னை வாடல் நோயை கட்டுப்படுத்தவும், தென்னை மறுநடவு திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கச் செய்யவும், விவசாயி களுக்கு வழங்கப்படும் அடையாள  அட்டையின் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். மைவாடி ஊராட்சியில் உள்ள வேளாண் கூட்டுறவு வங்கியில் நிரந்தர செய லாளர் நியமனம் செய்யவும், SF7  நிலத்தில் வசிக்கும் ஏழை மக்க ளுக்கு பட்டா வழங்கவும், நீர் வழித் தடங்களை ஆக்கிரமிப்பு செய்த வர்கள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும். உடுமலை ஜம்புக்கல்  மலையில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர். இக்கூட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டாட்சியர்கள், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர் வாகிகள் பாலதண்டபாணி, ராஜ கோபால், அருண்பிரகாஷ் மற்றும்  பட்டு விவசாயிகள் சங்கத்தின் செல்வராஜ் உள்ளிட்ட திரளான  விவசாயிகள் கலந்து கொண்ட னர்.

நூறு நாள் வேலை திட்ட சம்பளப்  பாக்கியை உடனே வழங்க கோரிக்கை அவிநாசி

, மார்ச் 25– நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றிய தொழிலா ளர்களுக்கு உடனடியாக சம்பளப் பாக்கியை வழங்க  வேண்டும் என விதொச மனு அளித்துள்ளது. அவிநாசி அருகே செம்பியநல்லூர் ஊராட்சி மன்ற அலுவ லகத்தில் செவ்வாயன்று, அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கத்தினர் அளித்த கோரிக்கை மனுவில், நிலுவை யில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண் டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், விவசாயத்  தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சண்முகம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, முருகேசன் உட் பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு இதேபோன்று, தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்களுக்கு ஊதிய நிலுவையை வழங்கக் கோரி  பவானி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் செவ்வாயன்று விவ சாயத் தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர். இதில், தமிழ்நாடு அனைத்துவகை மாற்று திறனாளிகள் மற்றும் பாது காப்போர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் ஒன்றியச் செயலாளர் ஜி.சரவணன், தொழிற்சங்கத்தின் தலைவர் காசி விசுவநாதன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப் பினர் ஏபி.ராஜு, ஒன்றிய செயலாளர் பி.சுப்பிரமணி  உள்ளிட் டோர் பங்கேற்றனர்.