வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப் பட்ட 97 பணியிடங்களை உடனடி யாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவ லர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்க ளின் நியாயமான கோரிக்கைகள் மீது தமிழக அரசு விரைந்து அர சாணைகளை வெளியிட வேண் டும். தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவ லர்களின் பணித்தன்மையினை கருத்தில் கொண்டு அனைவருக் கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மூன்றாண்டுக ளுக்கு மேற்பட்ட அலுவலக உதவி யாளர் காலிப் பணியிடங்களை உட னடியாக நிரப்பிட வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்சவரம் பினை ஐந்து சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளதை ரத்து செய்து மீண் டும் 25 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, மாவட்டத் தலைவர் அருள் பிரகாஷ் தலைமை ஏற்றார். இதில், மாநில துணைத் தலைவர் வெ. அர்த்தனாரி, மாவட்ட செயலாளர் முருக பூபதி, மாவட்ட பொருளா ளர் அகிலன் உள்ளிட்டு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். தருமபுரி இதேபோன்று, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டத் தலைவர் சி.துரை வேல் தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் ம.சிவன், மத்திய செயற்குழு உறுப்பினர் அ. அசோக் குமார், மாவட்ட பொருளாளர் இல. பசுபதி உள்ளிட்டோர் பேசினர். மேலும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.தெய்வானை வாழ்த்தி பேசி னார்.