tamilnadu

img

பூட்டிய கழிவறையை திறக்க கோரிக்கை

பூட்டிய கழிவறையை திறக்க கோரிக்கை

சேலம், அக்.27- சேலம் ரயில் நிலையத்தில் பூட்டிய கழிவறையை திறக்க  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  சேலம் மாநகரின் மையப் பகுதியில் உள்ள சேலம் ரயில்  நிலையத்திற்கு வெளியே உள்ள கழிவறையை 10 நாட்க ளாக திறக்காமல் மூடி உள்ளனர். ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளும் வெளியே செல்லும் பயணிகளும் பயன்படுத்தி  வந்த இந்த கட்டண கழிப்பிடத்தை திறக்கப்படாமல் உள்ள தால் பயணிகள் பொது வழியில் சிறுநீர் கழிப்பது மலம்  கழிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற னர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணி கள் அதிக அளவில் சேலம் ரயில் நிலையத்திற்கு வருகை  தருவது வழக்கம். இருப்பினும் பொதுமக்கள் பயன்படுத்தி  வந்த கழிவறை 10 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள தால், இயற்கை உபாதைகளை கழிக்க இடம் இல்லாத தால் பயணிகள் அவதிப்பட்டு வரும் சூழ்நிலை உள்ளது. பூட் டிய கழிவறையை உடனடியாக திறக்க வேண்டும். சுகாதார  சீர்கேடு இல்லாத ரயில் நிலையமாக இருக்க ரயில்வே அதி காரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என  பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.