கோவை,ஜனவரி.04- தனியார் மருத்துவமனை செவிலியர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் சேர்ந்த ஜான்யா(21) கோவையில் கோவை ராமநாதபுரம் பகுதி பாரிநகரில் உள்ள மனு மருத்துவமனையில் தங்கி பயிற்சி செவிலியராக பணிபுரிகிறார்.
இவர் நேற்று இரவு திடீரென மருத்துவமனையின் 3ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பலத்த காயங்களுடன் இருந்த ஜான்யாவை மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.