கோடை காலத்தையொட்டி மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையேயான சிறப்பு மலை ரெயில் ஏப்ரல் 3ம் தேதி முதல் ஜூலை 4ம் தேதி வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னக ரெயில்வே சேலம் கோட்ட மேலாளர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியதாவது
ஊட்டி கோடை சீசனையொட்டி ஏப்ரல் 3ம் தேதி முதல் ஜூலை 4ம் தேதி வரை வாரத்தில் சனி, ஞாயிறு இரண்டு தினங்களில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது
மேட்டுப்பாளையத்தில் இருந்து சனிக்கிழமை காலை 9.10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.25 மணிக்கு ஊட்டி சென்றடையும். ஞாயிறுக்கிழமை காலை 11.25 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும்.
இந்த சிறப்பு மலை ரயில் குன்னூரில் மட்டும் நின்று செல்லும். மேலும் இதற்கான கட்டணங்கள் தற்போது வரை முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.