உடல் நலக்குறைவுடன் பிடிபட்ட சிறுத்தை உயிரிழப்பு
கோவை மாவட்டம் ஓணாப் பாளையம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக கால்நடைகளை வேட்டை யாடி வந்த பெண் சிறுத்தை ஒன்று உடல் நலக்குறைவு காரணமாக பிடி பட்ட நிலையில் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் விவசாய தோட்டத்தில் கட்டியி ருந்த 4 ஆடுகளை சிறுத்தை கொன் றது. இதையடுத்து வனத்துறையி னர் கண்காணிப்பு கேமரா மற்றும் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க காத்திருந்தனர். இந்நிலை யில், திங்களன்று கலிக்கநாயக்கன் பாளையம் பூச்சியூர் அருகே உள்ள பயனற்ற கட்டிடத்தில் சிறுத்தை இருப்பதாக வனத்துறைக்கு தக வல் கிடைத்தது. இதையடுத்து கோவை சரக வனத்துறையினர் அங்கு முகாமிட்டு சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது நள்ளிரவில் திடீரென வெளியே வந்த சிறுத்தை அங் கிருந்த பொதுமக்கள் 2 பேரை தாக்கியது. இருவரும் சிறுத் தையை மடக்கிய நிலையில், வனத் துறையினர் சிறுத்தையைப் பிடித் தனர். பிடிபட்ட சிறுத்தை உடல் மெலிந்த நிலையில் சோர்வாக இருந்தது. மேலும் உடலில் நோய் தொற்றும் காணப்பட்டது. இதை யடுத்து, பிடிபட்ட சிறுத்தை மருத மலை வனத்துறை அலுவலகத் தில் வைத்து கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையி லான மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிறுத்தை செவ்வாயன்று மதியம் 1 மணியளவில் உயிரிழந்தது. இது குறித்து பேசிய கோவை மாவட்ட வன அலுவலர் ஜெய ராஜ், “சுமார் 5 வயது பெண் சிறுத்தை கடந்த ஒரு மாதமாக ஓணாப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் கால்நடைகளை தாக்கி வந்தது. இதையடுத்து கண் காணிப்பு கேமராக்களை வைத்து தொடர்ந்து கண்காணித்து வந் தோம். இந்நிலையில் கலிக்கநாயக் கன்பாளையம் பகுதியில் சிறுத்தை உடல் நலம் குன்றிய நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த சிறுத்தையை வலை மூலம் பிடித்தோம். உடல் நலம் மோசமாக இருந்ததால் ஊட் டச்சத்து மாத்திரைகள், குளுகோஸ் மற்றும் தண்ணீர் கொடுத்து வந் தோம். சிகிச்சையில் நல்ல முன் னேற்றமும் இருந்தது. இருப்பி னும், சிறுத்தையின் மேற்பற்களும், கீழ்பற்களும் உடைந்திருந்தது. அதே போல காலில் எலும்பு முறிவு கள் ஏற்பட்டு வீக்கம் இருந்தது. மதி யம் 1 மணியளவில் சிறுத்தை உயிரி ழந்தது. உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு முழுமையான விவரங்கள் தெரியவரும்” என்றார்.