சட்ட விழிப்புணர்வு முகாம் பெரம்பலூர்,
மார்ச் 26 - பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளி யில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பெரம்ப லூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செய லாளரும், உதவி நீதி மன்ற நீதிபதியுமான மஹேந்திரவர்மன் தலைமை வகித்து, சட்ட பணிகள் ஆணைக்குழு வின் பணிகள், நன்மை கள் குறித்து பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் மதியழகன் முன்னிலை வகித்தார். தலைமை சட்ட பாதுகாப்பு வழக்கறிஞர் சிராஜூதீன், சட்ட உதவி பாதுகாப்பு வழக்கறிஞர் தினேஷ் ஆகியோர் சட்ட கருத்துரைகளை ஆற்றி னர். நிகழ்ச்சியில் மரக் கன்று நடப்பட்டது. முகா மில் பொதுமக்கள் கோ ரிக்கை மனுக்களை அளித் தனர். டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி பெரம்பலூர், மார்ச் 26 - பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் டிஎன்பிஎஸ்சி தொகுதி-I தேர்வுக்கான
இலவச பயிற்சி வகுப்புகள்
மார்ச் 26 அன்று துவங் கின. இப்பயிற்சி வகுப்பு கள் வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் நடை பெறும். போட்டித் தேர்வர் களுக்கு தேவையான அனைத்து சமச்சீர் பாடப் புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி, வாராந்திர மாதிரித் தேர்வுகள் நடத்தப் படும். பாடத்திட்டத்தின் படி வகுப்புகள் எடுக்கப்படும். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும் பும் பெரம்பலூர் மாவட் டத்தைச் சார்ந்த போட்டித் தேர்வு ஆர்வலர்கள் நேரிலோ அல்லது 94990 55913 என்ற பெரம்பலூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டல் மைய தொலை பேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். தேரோட்டம் தஞ்சாவூர், மார்ச் 26 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ள தெத் திருப்பதி எனப் போற்றப் படும் ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெரு விழா
கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த
மார்ச் 17 ஆம் தேதி கொடி யேற்றம் நடைபெற்றது. பங்குனிப் பெருவிழாவை யொட்டி கடந்த மார்ச் 17 முதல் 28 ஆம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. முக்கிய நிகழ் வான தேரோட்டம் புத னன்று நடைபெற்றது. குட்கா பறிமுதல் பாபநாசம், மார்ச் 26 - பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலத்தில் தமிழக அரசால் தடை செய்யப் பட்ட 225 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன. தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில், கபிஸ்தலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாலக்கரை பகுதியில் மளி கைக் கடை நடத்தி வரும் சுரேஷ் (52) என்பவரது கடையில் கபிஸ்தலம் போலீசார் சோதனை மேற் கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட 225 கிலோ குட்கா மற்றும் புகை யிலைப் பொருட்களை பறி முதல் செய்து சுரேஷை கைது செய்தனர்.