இஸ்ரேல் இனவெறி அரசை கண்டித்து இடதுசாரி கட்சிகள் ஆவேசம்
தருமபுரி, ஜூன் 30 – பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் இன வெறி அரசைக் கண்டித்து இடது சாரி கட்சிகள் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு திங்களன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பாலஸ்தீன மக்கள் மீது இன வெறி பிடித்த இஸ்ரேல் அரசு வெறித்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த 2023 அக் டோபர் 7 முதல், இன்று வரை இஸ் ரேல் நடத்திய தாக்குதலில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ் தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்களும், குழந்தை களும் பெரும் எண்ணிக்கையாகும். நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த கட்டமைப்புகள், மருத்துவமனை கள், கல்வி நிலையங்கள், அகதி முகாம்கள் உள்ளிட்டவைகளை இஸ்ரேல் குறிவைத்து தாக்கி அழித்து வருகிறது. உணவும், மருந் தும் இல்லாமல் பச்சிளம் குழந்தை கள் மடிந்து வருவது கண்டு, பாலஸ் தீன மக்கள் கதறி அழும் குரல் உல கின் மனசாட்சியை உலுக்கி வருகி றது. அமெரிக்காவின் ஆயுத உதவி யுடன், முழுமையான ஆதர வோடு இஸ்ரேல் அரசு இந்த இனப் படுகொலையை நிகழ்த்தி வரு கிறது. பாலஸ்தீன மக்களின் மீது இன அழிப்பு வெறியோடு, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை உலக நாடுகள் வன்மையாகக் கண்டித்து, போரை நிறுத்தும்படி வலியுறுத்தி வருகின்றன. ஐக்கிய நாடுகள் அவையில் உறுப்பு நாடுகளாக உள்ள 193 நாடுகளில் 149 நாடுகள் இஸ்ரேலின் போர் வெறிக்கு எதி ரான தீர்மானத்தை ஆதரித்துள் ளன. ஆனால், பாலஸ்தீன மக்க ளின் உரிமை களுக்காக ஆரம்ப நாள் முதல் ஆதரவு தெரிவித்து வந்த இந்தியா, மோடி ஆட்சியில் வழி வழி யான நிலையை மாற்றி, இனவெறி இஸ்ரேலுக்கு ஆதர வாக செயல்பட்டு வருகிறது. அண்மையில் ஐ.நா. சபையில் நடந்த வாக்கெடுப்பில், இந்தியா பங்கேற்காமல் நாட்டின் பாரம்பரிய மான வெளியுறவுக் கொள்கைக்கு மோடியின் அரசு துரோகமிழைத் துள்ளது. இஸ்ரேல் அரசின் இனவெறி படுகொலைகள், போர்க் குற்றச் செயல்களைக் கண்டித்து, தேச உரிமைக்கும், கண்ணியமான, இறையாண்மை கொண்ட சுதந்திர தாயக உரிமைக்கும் போராடும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு குரல் கொடுக்க, மோடியின் ஒன் றிய அரசு, இந்தியாவின் பாரம்ப ரிய வெளியுறவுக் கொள்கை நெறி களில் உறுதியாக நிற்க வலியு றுத்தி, பாலஸ்தீன மக்களின் உரி மைப் போராட்டத்தை தொடர்ந்து ஆதரிப்பதுடன், இனவெறி பிடித்த இஸ்ரேலுக்கு இந்தியா ஆயுத விற்பனை செய்து ஒத்துழைத்து வருவதை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஆர்ப் பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ். கலைச்செல்வம், தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்து கண்ணன், மாநிலக் குழு உறுப்பி னர் ஏ. குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், சி.பி.ஐ.(எம் எல்) மாவட்டச் செயலாளர் கே. கோவிந்த ராஜ் மாவட்ட நிர்வாகி சி. முருகன், ராமதிலகன், சிபிஐ மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ். தேவராஜன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சின்னசாமி கே.மணி, ஆகியோர் பங்கேற்று பேசினர்.