tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மாற்றுத்திறனாளி வழக்குரைஞர்கள் சங்க கூட்டம்

கோவை, மே 11- கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு மாற்றுத்திறனாளி வழக்குரைஞர்கள் நலச்சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டத் தில், சென்னையில் மாபெரும் மாநாடு நடத்துவதற்கு திட்ட மிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளி வழக்குரைஞர்கள் நலச் சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம், ஞாயிறன்று கோவை காட்டூர்  பகுதியில் உள்ள சிறப்பு குழந்தைகள் பள்ளியில் நடைபெற் றது. இக்கூட்டத்திற்கு, அச்சங்கத்தின் மாநிலத் தலைவர்  வழக்குரைஞர் வெற்றிவேல் தலைமை வகித்தார். இதில் பல் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் கலந்து  கொண்டனர். இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் களுக்கான தேவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப் பட்டது. குறிப்பாக மாற்றுத்திறனாளி வழக்குரைஞர்கள் நீதி மன்றங்களுக்கு சென்று பணியாற்றுவதற்கு தேவையான  லிப்ட், சாய்தளம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும்,  மாற்றுத்திறனாளிகள் கழிவறைகள் குறித்தும் தனி சேம்பர்கள்  வேண்டும் என்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. இதுசம்பந்தமாக வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் சென்னை யில் மாநாடு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வேலை நிறுத்த தயாரிப்பு ஆலோசனைக் கூட்டம்

அவிநாசி, மே 11- மே 20 ஆம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய பொது  வேலை நிறுத்த போராட்டத்திற்கான தயாரிப்பு ஆலோ சனைக் கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். அனைத்து தொழிற்சங்கங்கள் ஆலோசனை கூட்டம், சிஐ டியு மாநிலக்குழு உறுப்பினர் பி.முத்துசாமி தலைமையில் சனி யன்று, அவிநாசியில் சிஐடியு அலுவலகத்தில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் தொமுச மாவட்ட கவுன்சில் துணைத் தலைவர் ஆர்.ரங்கசாமி, மாவட்டச் செயலாளர் வெ.மனோ கரன், எம்எல்எப் மாவட்ட துணைச்செயலாளர் முருகேசன், ஏஐடியுசி ஒன்றியச் செயலாளர் ஏ.ஜி.சண்முகம், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ஈஸ்வரமூர்த்தி, ஐஎன்டியுசி மாவட்ட துணைத்தலைவர் நவநீதக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், மே 20 ஆம் தேதி யன்று நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தத்தை யொட்டி,  நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை திரட்டி மறியல் போராட்டம் நடத்துவதும், போராட்டத்தை விளக்கி மே 17  ஆம் தேதியன்று வேன் பிரச்சாரம் செய்வதும், தொழிலா ளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க அறைகூவல் விடுத்து  துண்டறிக்கை வழங்குவது, சுவரொட்டி ஒட்டுதல், வணிகர்  அமைப்புகள், கார், வேன், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமை யாளர் சங்கங்கள், தொழில் அமைப்புகள் ஆகியவற்றுக்கு ஆதரவு கேட்டு கடிதம் அளிப்பது, என முடிவு செய்யப் பட்டது.

கோவை குற்றாலத்தில் குவியும் மக்கள்

கோவை, மே 11- கோடை விடுமுறையை முன்னிட்டு, கடந்த இரண்டு நாட்க ளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலம் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில்  ஒன்றான கோவை குற்றாலத்திற்கு, பல்வேறு மாவட்டங்க ளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து  செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள தால் தினமும் ஆயிரக்கணக்கானோர் அருவியில் குளித்து  மகிழ்ந்து வருகின்றனர். அதன்படி, சனியன்று ஒரே நாளில்  3,100 சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்துச் சென்றனர். தொடர்ந்து, ஞாயிறன்று பல்வேறு பகுதிகளில் இருந்து காலை  முதல் வந்த சுற்றுலாப் பயணிகள் சாடிவயல் பகுதியில் உள்ள  கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல நீண்ட வரிசை யில் காத்திருந்து நுழைவுச் சீட்டு வாங்கிச் சென்று, அருவி யில் குளித்து மகிழ்ந்தனர். கோடை வெப்பத்தின் தாக்கமும் அதிகம் உள்ளதால் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவ ரும் உற்சாகமாக பொழுது போக்கினர். மேலும், சுற்றுலாப்  பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கால இடை வெளியில் குறிப்பிட்ட அளவிளான சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும்  வனத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒரே நாளில் 821 குழந்தை கள் உட்பட 4500க்கும் மேற்பட்டோர் அருவியில் குளித் துச் சென்றனர்.

போக்குவரத்து ஊழியர் சங்க மகாசபை

திருப்பூர், மே 11- சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் மகாசபை யில், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க திருப்பூர்  1 கிளையின் 34 ஆவது மகாசபை சனியன்று, திருப்பூரில் கிளைத் தலைவர் அன்புச்செல்வம் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில், 15 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உட னடியாக பேசி முடிக்க வேண்டும். ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வுபெறும் நாளிலேயே பணப்ப லன்களை வழங்க வேண்டும். 30 ஆயிரம் காலிப்பணியிடங் களை உடனடியாக நிரப்ப வேண்டும். தொழிலாளர்களின் அவ சிய விடுப்புகளை பணியாளர் பற்றாக்குறையை காரணம்  காட்டி, விடுப்பு மறுத்து ஆப்சென்ட் போட்டு தொழிலாளர் களை சீரழிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பஞ்சப்படி உயர்வையும், அரியஸ் தொகையும் வழங்க வேண்டும். மே  20 நடைபெறும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது, உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் கிளைத் தலைவராக ஆர். அன்புசெல்வம், செயலாளராக எ.ராஜேந்திரன், பொருளாள ராக எ.சுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், மண்டல பொதுச்செயலாளர் பி.செல்லத்துரை, மண்ட லப் பொருளாளர் என்.சுப்பிரமணி, துணை பொதுச்செயலா ளர் கே.கொங்குராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திறந்தவெளி கிணற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்

தருமபுரி, மே 11- மொரப்பூர் ஒன்றியத்தில் அமைக்கப்பட்ட  திறந்தவெளி கிணற்றில், மோட்டார் அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய வேண் டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர். பொதுமக்களின் குடிநீர் மற்றும் அன்றாட  தேவைகளுக்காக, தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரியம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. கூட்டுக்குடிநீர் திட்டம், ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர்  வழங்கும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப் படுகிறது. ஊராட்சிகளில் உள்ள கிராமங்க ளுக்கு திறந்தவெளி கிணறுகள் அமைக்கப் பட்டு, அவற்றின் மூலமும் தண்ணீர் தேவை  பூர்த்தி செய்யப்படுகிறது. இதன்ஒருபகுதி யாக, கடந்த 2018 – 19 ஆம் ஆண்டு தருமபுரி  மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் எம்.தொப்பம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி நாயக்கன்ஏரி பகுதியில் திறந்த வெளிகிணறு அமைக்கப்பட்டது. இந்த கிணற்றில் மின்மோட்டார் மற்றும் தண்ணீர் குழாய் அமைக்கப்படவில்லை. இதனால் இந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க முடியாத நிலை உள்ளது. இதன்  காரணமாக சுற்றுவட்டார கிராம மக்கள்  கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை யால் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தற் போது அந்த கிணறு பயன்பாட்டில் இல்லா மல் காணப்படுகிறது. இதற்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், மொரப்பூர் ஒன்றியத்தில் பல் வேறு இடங்களில் பயன்பாட்டில்லாத திறந்த வெளி கிணறுகளை சீரமைக்க வேண்டும். சிறு  விலங்குகள் கிணற்றுக்குள் விழாமல் இருக்க வும், காலி பாட்டில்களை கிணற்றில் வீசுவ தால் ஏற்படும் தண்ணீர் மாசுபாட்டை தடுக்க வும், கிணறுகளின் மேல் பகுதியில் மூடிகள் அமைக்க வேண்டும், என அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.