டி.பாலன் இணையர் காலமானார்
கோவை தொழிலாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர் தோழர் டி.பாலன் அவர்களின் இனையர் பார்வதி (93) வயது மூப்பின் காரணமாக சனியன்று பீளமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். கோவையில் 1970 ஆண்டு தொழிலாளி வர்க்கத்தின் உரிமைக்குரலாய் சிஐடியு துவக்கப்பட்டபோது, அதன் ஒருங் கிணைப்பாளராக இருந்தவர் தோழர் டி.பாலன். இதனைத் தொடர்ந்து சிஐடியு மாவட்டச்செயலாளர், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர், கோவை மாவட்ட ஜில்லா ஜெனரல் என்ஜினியரிங் சங்க பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் தொழிலாளி வர்க்கத்தின் உரி மைக்கான போராட்டத்தில் முன்னின்றவர் தோழர் டி.பாலன். கோவை தொழிலாளி வர்க்கம் போனஸ் பேச்சுவார்த் தையில், டி.பாலன் பார்முலா என்ற ஒன்றையே இன்று வரை யில் கடைபிடிக்கின்றனர். அத்தகைய வர்க்க நலனுக்கான போராட்டத்தில் தோழர் டி.பாலனுடன் உடன் நின்றவர் அவ ரது இனையர் பார்வதி. இவர் வயது மூப்பின் காரணமாக சனி யன்று (மே 17) கோவை பீளமேட்டில் உள்ள அவரது இல்லத் தில் காலமானார். பார்வதியின் காலமான தகவல் அறிந்து, மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மூத்த தொழிற்சங்க தலை வரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான யு.கே.வெள்ளிங்கிரி, இன்ஜினியரிங் சங்க பொதுச்செயலாளர் டி. துரைசாமி, பொருளாளர் ஏ.ஜி.சுப்பரமணி. சிஐடியு டி. பாலன் நினைவு இன்ஜினியரிங் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் சிஐடியு நிர்வாகி கே.ரத்தினகுமார், பிளமேடு இடைக் குழு செயலாளர் ஏ.மேகநாதன், சிங்கை இடைக்குழு செயலா ளர் ஆர்.மூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு
நாமக்கல், மே 17- மோகனூர் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரி வித்து, அப்பகுதி விவசாயிகள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள வளை யபட்டி, பரளி, அரூர், என்.புதுப்பட்டியில் 882 ஏக்கர் பரப்பள வில் சிப்காட் அமைக்கப்பட உள்ளது. அதற்கான நிலமும் கையப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், விவசாயிகள், சிப்காட் எதிர்ப்பு குழுவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரு கின்றனர். சிப்காட் அமைத்தே தீர வேண்டும் எனக்கூறி, வரு வாய்த்துறையினர் நன்றாக விளையக்கூடிய நிலத்தை தரிசு நிலமாக மாற்றி, தமிழக அரசுக்கு தவறான தகவல்களை அளித்துள்ளனர். அந்த அதிகாரிகள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி சிப்காட் எதிர்ப்பு குழுவினர் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் புகார் மனு அளித்தனர்.
சேர்ந்திருந்த விரல்களை பிரித்து சாதனை
ஈரோடு, மே 17- அந்தியூர் பகுதியை சேர்ந்த பெண்ணின் இணைந்த விரல் களை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் பிரித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத் துள்ளனர். ஈரோடு அரசு தலைமை மருத்து வமனைக்கு அந்தியூர் பகுதியை சேர்ந்த கோபிகா (14) என்ற சிறுமி கடந்த 10.5.2025 ஆம் தேதியன்று காலை 9.45 மணிக்கு அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட் டார். அவருக்கு பிறவியிலேயே இரண்டு கைகளில் உள்ள விரல் கள் இணைந்துள்ளது. பிளாஸ் டிக் அறுவை சிகிச்சை நிபுணரின் ஆலோசனைப்படி வலது கை விரல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வலது கை விரல்கள் (ஆள் காட்டி விரல் மற்றும் நடு விரல்) கடந்த 13.5.2025 ஆம் தேதி யன்று பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து பிரிக்கப்பட்டன. அடுத்த மூன்று மாதங்கள் கழித்து நடு விரலும் மற்றும் மோதிர விர லும் பிரிக்கப்பட உள்ளன. இந்த அறுவை சிகிச்சையா னது தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவு ஆகும். இந்நிலையில், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை யில் முற்றிலும் இலவசமாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, சாதனை செய்யப் பட்டுள்ளது. மேற்படி, சிறுமி கோபிகா நலமுடன் உள்ளார்.
வாழை மரங்கள் சேதம்: விவசாயிகள் கவலை
கோவை, மே 17- அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட் டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 50,000க்கும் மேற் பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமான தால் விவசாயிகள் கவலை அடைந்துள் ளனர். கோவை மாவட்டம், அன்னூர் மற் றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான காட்டம்பட்டி, எல்லப்பாளையம், கெம் மநாயக்கன்பாளையம், குப்பே பாளை யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேந்திரன், கதளி, செவ்வாழை, ரஸ்த் தாளி உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகள் பயிர் செய்யபட்டு இருந் தது. இந்நிலையில், வெள்ளியன்று இரவு இந்த பகுதிகளில் சூறாவளி காற்று டன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக இங்கு பயிர் செய்யபட்டி ருந்த 50,000க்கும் மேற்பட்ட வாழை மரங் கள் முறிந்து சேதமானதால் விவசாயி களுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட் டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள னர். மேலும், ஒரு வாழைக்கு ரூ. 150 முதல் 200 ரூபாய் வரை செலவு செய்து தயார் செய்யப்பட்டிருந்த வாழை மரங் கள் சூறாவளி காற்றால் சேதமடைந் ததால் தங்கள் வாழ்வாதாரமே இழந்து விட்டது. எனவே அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள் ளனர்.