ஒப்பந்தம் போடப்பட்ட பணிகளை விரைந்து முடித்திடுக
கோவை, அக்.14- ஒப்பந்தம் போடப்பட்ட பணி களை விரைந்து முடிக்க வேண்டும் மற்றும் சொத்து வரி உயர்வு விவ காரத்தில் எப்போதும் ஒரே நிலை பாடு தான் என சிபிஎம் மாமன்ற குழு தலைவர் வி.இராமமூர்த்தி தெரி வித்தார். கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் கா. ரங்கநாயகி தலைமையில், மாநக ராட்சி பிரதான அலுவலக வளாகத் தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் செவ்வாயன்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாக ரன், துணை மேயர் வெற்றிச்செல் வன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும், கரூர் த.வெ.க. பிரச்சாரக் கூட்ட நெரிச லில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, ஜி.டி.நாயுடு மேம் பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த தமிழ்நாடு முதல் வர் மு.க. ஸ்டாலினுக்கு கோவை மாநகராட்சி சார்பில் நன்றி தெரி வித்து சிறப்புத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. முன்னதாக, மேம்பாலத் திட் டம் குறித்து அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்களிடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. “திட்டத்தைக் கொண்டு வந்தது நாங்கள்தான்” என அதிமுக உறுப்பினர்களும், “திட்டத்தைக் கொண்டு வந் தாலும், நிதியை முழுமையாக ஒதுக்கீடு செய்து பணிகளை முடித் தது திமுக அரசுதான்” என திமுக உறுப்பினர்களும் வாதிட்டனர். இதனையடுத்து, அதிமுக கவுன் சிலர்கள் மாமன்றக் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த னர். இதனைத் தொடர்ந்து, மாநக ராட்சி வார்டுகளில் மூங்கில் பூங்கா அமைத்தல், சாலை பராமரிப்புப் பணி மற்றும் பல்வேறு அபிவிருத் திப் பணிகள் உள்ளிட்ட 103 தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், மாநகராட்சி முழுவ தும் உள்ள தெரு நாய் பிரச்சனை கள், சாலை சீரமைப்புப் பணிகள், குடிநீர் குழாய் உள்ளிட்ட பல் வேறு பிரச்சனைகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கைகள்: கூட்டத்திற்குப் பின் செய்தியா ளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்றக் குழு தலைவர் வி.இராமமூர்த்தி, அத்தியாவசியப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி ஆணை யாளரிடம் மனு அளித்து 40 நாட் கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. உடையாம்பாளையம் - சக்தி சாலை பெரிய பள்ள வாய்க் கால், கான்கிரீட் சாலைகள் அமைக் கும் பணிகள் உடனடியாகத் துவங் கப்பட வேண்டும் என வலியுறுத்தி னார். மேலும், வடக்கு மண்டலத் திற்குட்பட்ட காளப்பட்டி, சரவணம் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அம்ருத் திட்டப் பணிகளால் சாலைகள் கூடு தலாகச் சேதமடைந்துள்ளதால், புதிய சாலைகள் அமைக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். தூய் மைப் பணியாளர்களுக்கு பாது காப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், அனைத்து வார்டுகளி லும் குப்பைகளை சேகரிக்க சிறிய வாகனங்களை வழங்க வேண்டும் மற்றும் ஒப்பந்தம் விடப்பட்ட அனைத்துப் பணிகளையும் கால தாமதமின்றி விரைந்து முடிக்க வேண்டும். சொத்து வரி உயர்வு விவகாரத்தில், “வரியை உயர்த்தி இருக்கக் கூடாது; அபராத வரி இருக்கக் கூடாது” என்ற தங்கள் நிலைப்பாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உறுதியாக உள்ளது. இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட 21 கவுன்சிலர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளதாக வி. இராமமூர்த்தி தெரிவித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப் பின் போது, 24 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ர.பூபதி, 28 ஆவது வார்டு உறுப்பினர் கண்ணகி ஜோதிபாசு, 13 ஆவது வார்டு உறுப் பினர் என். சுமதி ஆகியோர் உடனி ருந்தனர்.