இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது புகார்
நாமக்கல், மே 3- மிரட்டல் விடுப்பதாகக்கூறி, இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட் டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையதித்தில் தனியார் ஜோதிட பயிற்சி கல்வி மையம் நடத்தி வரும் முகுந்தன் முரளி என்பவர், சனியன்று காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கோவையைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி ஜோதிடரணி தலைவர் மந்திராச்சலம் என்பவர், தொடர்ந்து தன்னை பற்றியும், எங்களுடைய ஜோதிட ஆராய்ச்சி அறிவ கம் மற்றும் பயிற்சி மையத்தை பற்றியும் முகநூலில் அவதூறா கவும் பதிவிட்டு வருகிறார். மேலும், எங்களுக்கு ஆதரவாக செயல்படும் ஜோதிட நண்பர்களையும் தொடர்ந்து மிரட்டி வருகிறார். இந்து மக்கள் கட்சியில் இருப்பதால் ஜோதி டம் சார்ந்த மாநாடு, கருத்தரங்கு கூட்டம் உள்ளிட்டவற்றை தன்னிடம் கேட்டுவிட்டு தான் நடத்த வேண்டும், என மிரட்டுகிறார். இதனால் ஜோதிடத் தொழிலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என என தெரிவிக்கப் பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி யில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த இயக்குநர் மாரி முத்து உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மந்திராச்சலம் பிரபலமானார். தொழில் போட்டி காரணமாக மந்திராச்சலம் மற்றும் முகுந்தன் முரளி ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் தொடர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.