tamilnadu

img

தோழர் டி.பி.முத்துசாமி நினைவுதினம் அனுசரிப்பு

தோழர் வேலுச்சாமி நினைவு தினம் அனுசரிப்பு

கந்துவட்டிக்கும்பலால் படுகொலை செய்யப்பட்ட தியாகி வேலுச்சாமி நினைவுதினம் திங்களன்று அனுசரிக் கப்பட்டது. பள்ளிபாளையம் பகுதியில் சிபிஎம் அக்ரஹாரம் பகுதி  கிளைச் செயலாளராக செயல்பட்டு வந்தவர் தோழர் வேலுச் சாமி. விசைத்தறி தொழிலாளி ஒருவர் கந்துவட்டி கும்பலி டம் வாங்கிய கடனை கட்ட முடியாததால், அக்கும்பல் அப் பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்தி, அதை வீடியோ வாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இந்த அநீ திக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை மேற் கொண்டார் வேலுச்சாமி. இதனை பொறுத்துக்கொள்ள முடி யாத சமூகவிரோத கந்துவட்டி கும்பல் கடந்த 2010 ஆம்  ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி வெட்டிக் கொலை செய்த னர். தோழர் வேலுச்சாமி அவர்களின் நினைவு தினம் ஒவ் வொரு ஆண்டும் மார்க்சிஸ்ட் கட்சியினரால் அனுசரிக் கப்பட்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக, திங்களன்று பள்ளி பாளையம் ஆவரங்காடு நகர அலுவலகம், காவேரி ஆர்.எஸ். தொழிற்சங்க அலுவலகம் உள்ளிட்ட மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளிலும் தோழர் வேலுச்சாமி நினைவேந் தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தோழர் வேலுச்சாமி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சி  மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், கட்சி  ஒன்றியச் செயலாளர் லட்சுமணன், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் நவீன் மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் இந்த நிகழ்வுகளில் பங்கேற்றனர்.