tamilnadu

img

கோவை கார் வெடிப்பு: என்.ஐ.ஏ விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவு!

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்புக்கு (எம்.ஐ.ஏ) ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவையில் உள்ள உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23-ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்து முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆய்வாளர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 12 மணி நேரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று இரவு மேலும் ஒருவரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்குகளை விசாரிக்க என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரை செய்தார். இந்நிலையில், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்புக்கு (எம்.ஐ.ஏ) ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.