tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு
ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி விசாரணைக்கு ஆஜர்

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயல லிதாவின் பாதுகாப்பு அதிகாரி செவ் வாயன்று விசாரணைக்கு நேரில் ஆஜ ராகினார். 2017 ஆம் ஆண்டு நடந்த கொடநாடு  கொலை கொள்ளை வழக்கு தொடர் பாக சிபிசிஐடி போலீசார் விசார ணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இவ் வழக்கு தொடர்பாக முன்னாள் முதல் வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழ னிச்சாமியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி வீர பெருமாளிடம் சிபிசிஐடி போலீசார் செவ்வாயன்று விசாரணை மேற் கொண்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ னிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை  நடத்தினர். அப்போது, சசிகலா கொட நாடு வந்தபோது கொள்ளை தொடர் பாக ஏதாவது கேட்டறிந்தாரா? எஸ் டேட்டில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற் றும் பாதுகாப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, முன் னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும்  எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு  அதிகாரியாக இருந்த ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி வீரபெருமாளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர். அதன் படி, வீரபெருமாள் கோவை காந்திபு ரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவ லகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் முதல்வரின் பாதுகாப்பு  பிரிவு ஆய்வாளராக இருந்த கனக ராஜ், கொடநாடு வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ்க்கு குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அந்த செல்போனை ஆய்வாளர் கனகராஜ் போலீசாரிடம் ஒப்படைத்தாரா? பறிமு தல் செய்யப்பட்டதா? எதற்காக குறுஞ் செய்தி அனுப்பினார் என விசாரிக் கப்பட்டதா? என்பது குறித்தும் வீரபெரு மாளிடம் விசாரணை நடத்தப்பட்டு வரு கிறது.

வட்டியில்லா கடன் தருவதாக மோசடி!  

ஈரோடு, மார்ச் 11 - ஈரோடு மாவட்டத்தில் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பவுண் டேஷன் என்ற நிறுவனம் வட்டியில்லா கடன் தருவதாக கூறி  சுமார் 3 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட வர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள னர். சென்னிமலை, சத்தியமங்கலம், திருச்செங்கோடு உள் ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஈரோடு மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதா வது: கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும்  ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தின் கிளை சத்தியமங்கலத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவ னம், வட்டியில்லா மானியத்துடன் கடன் வழங்குவதாக கூறி  எங்களிடம் பணம் வசூலித்தனர். ஆனால், இதுவரை எங்க ளுக்கு பணம் கொடுக்கவில்லை. இவ்வாறு சுமார் ரூ. 3  கோடி வரை பண மோசடி செய்துள்ளனர். எனவே, மோசடி  செய்த அறக்கட்டளை நிர்வாகி மீது உரிய நடவடிக்கை மேற் கொண்டு எங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என கேட்டுள்ளனர்.

ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

ஏற்காட்டில் நிலவும் கடும் பனிப்பொழி வால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த சூழல் நிலவுவதால் சுற்றுலாப் பய ணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட் டில் கடந்த சில வாரங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால், ஏற் காட்டில் உள்ள நீர்நிலைகளில் நீர்மட் டம் குறைந்தது. இருப்பினும், செவ்வாய்க் கிழமை காலை முதல் வெப்பம் குறைந்து, ஏற் காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிக ளில் கடும் பனிமூட்டம் சூழ்ந்தது. இந்த பனிமூட்டத்தால் ஏற்காடு முழுவ தும் கடும் குளிர் நிலவுகிறது. ஏற்காடு மற்றும்  அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவுவதால், ஐந்து அடி தூரத்தில் உள்ள பொருட்களைக் கூட தெளிவாகப் பார்க்க முடியாத நிலை உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தபடி கவனமாகச் சென்றனர். மேலும், கடும் பனி மூட்டத்துடன் சாரல் மழையும் பெய்து வருவ தால், உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு பொதுத் தேர்வுகள் நடை பெற்று வருவதால், ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இருப்பினும், சுற்றுலாப் பய ணிகள் இந்த கடும் குளிரையும் பொருட் படுத்தாமல், ஏற்காட்டின் முக்கிய இடங் களைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர். ஏற்காடு படகு இல்லத்திற்குச் சென்ற  சுற்றுலாப் பயணிகள் படகில் சவாரி செய்து,  ஏரியைச் சூழ்ந்திருந்த பனிமூட்டத்தை ரசித்த னர். சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்காவிற்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள சாகச  விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்த னர். இந்த பனிப்பொழிவு உள்ளூர் மக்களுக்கு சில சிரமங்களை ஏற்படுத்தினாலும், சுற்று லாப் பயணிகளுக்கு ஒரு புதுவித அனுப வத்தை அளித்துள்ளது.

புதிய பேருந்து சேவை துவக்கம் - மக்கள் மகிழ்ச்சி

திருச்செங்கோடு ஒன்றியப் பகுதிகளில்  பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, புதிய பேருந்து சேவைகள் செவ்வா யன்று தொடங்கப்பட்டன. மோடமங்கலம், தண்ணீர்பந்தல் பாளை யம், பச்சாம்பாளையம், பெருமாள் மலை,  இறையமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள், குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் பெரிதும் அவதிப் பட்டு வந்தனர். இதுகுறித்து சட்டமன்ற உறுப் பினர் ஈஸ்வரன் கவனத்திற்கு அப்பகுதி மக்கள் கொண்டு சென்றனர். இதையடுத்து, புதிய பேருந்து சேவைகளைத் தொடங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்திருந்தார். இதன்படி தற்போது புதிய பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது.  அதன்படி, திருச்செங்கோடு - மோடமங் கலம் - தண்ணீர்பந்தல் பாளையம் - பச்சாம் பாளையம் - சங்ககிரி விவேகானந்தா கல் லூரி வழியாக காலை 7.05 மணிக்கும், மாலை  5.50 மணிக்கும் “8C” என்ற பேருந்து  திருச்செங்கோட்டிலிருந்து குமாரபாளையம்  வரை இயக்கப்படும். மேலும், திருச்செங் கோட்டிலிருந்து இறையமங்கலம் செல்லும் “11” ஆம் எண் பேருந்து, பெருமாள் மலை,  பட்டலூர், கொக்கராயன் பேட்டை வழியாக  இயக்கப்படும். இந்தப் பேருந்துகளின் தொடக்க விழா வில், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பி னர் மாதேஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி,  திருச்செங்கோடு நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ் பாபு, தலைமை செயற்குழு உறுப்பி னர் நடேசன், நகர்மன்ற துணைத்தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதிய பேருந்து சேவைகள் தொடங்கப்பட் டதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.