கோவை, ஜுன் 26 - கோவையில் உள்ள தமிழ் நாடு வேளாண்மை பல்கலை., யில் 10 இளங்கலை பட்டப்படிப்பு களுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 8ம் தேதி முதல் ஜூன் 17 வரை இணையதளம் மூலமாக பெறப்பட்டது. மொத்தமாக 51 ஆயிரத்து 876 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 41 ஆயிரத்து 590 விண்ணப்பங்கள் தகுதியுடையவையாக தேர்வு செய்யப்பட்டன. இந்த நிலை யில், நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டி யல் புதனன்று வெளியிடப்பட்டது. இதனை பல்கலைக்கழக துணை வேந்தர் குமார், பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய தாவது: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு கீழ் 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 27 இணைப்பு கல்லூரிகள் செயல் பட்டு வருகின்றனர். இதில், நடப்பு ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 3 ஆயிரத்து 905 இடங்கள் உள்ளன. இந்தாண்டு மாணவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில் 41 ஆயிரத்து 590 தகுதியுடைய விண்ணப்பங் களாக தேர்வு செய்யப்பட்டுள் ளன. இதில் 18 ஆயிரத்து 30 பேர் ஆண்கள். 23 ஆயிரத்து 560 பேர் பெண்கள். கடந்த 10 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு வேளாண் படிப்புகளில் சேர அதிக அளவிலான விண்ணப் பங்கள் பெறப்பட்டுள்ளது. வேளாண் சம்மந்தப்பட்ட படிப்பு களில் சேர ஒரு சீட்டுக்கு 10.7 மாணவர்கள் போட்டியிடுகின்ற னர். அக்ரி பாடப்பிரிவுக்கு மட்டும் ஒரு சீட்டுக்கு 70 பேர் வரை போட்டியிடுகின்றனர். தரவரிசைப்பட்டியலின் படி கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரேவதி என்ற மாணவி முதலிடத்தை பிடித்துள்ளார். புதுக்கோட்டையை சேர்ந்த சிவாலினி மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த ஆலன் என்பவர்கள் அடுத்த இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.