tamilnadu

img

கல்வி நிதியை வழங்காத ஒன்றிய அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம்!

கல்வி நிதியை வழங்காத ஒன்றிய அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம்!

கல்வி நிதியை ஒதுக்க மறுக்கும் விவகாரத் தில், ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, தமிழக  மக்கள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க  வேண்டும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.  சண்முகம் அறைகூவல் விடுத்துள்ளார். இந்தியை ஏற்காவிட்டால் நிதியை கொடுக்க  மாட்டோம் என்று கூறுவது, மாநிலத்தின் மக்க ளையும், மாணவர்களையும் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது ஆகும் என்று அவர் குற்றம் சாட்டினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு பொதுக்கூட்டம் கோவை தேர்நிலை திடலில் வெள்ளியன்று நடைபெற்றது. கோவை மாவட்டம் முழுவதும், வீடு, வீடாகவும், தொழி லாளர்களிடத்திலும் வசூலிக்கப்பட்ட ரூ. 25  லட்சம் நிதியை மாநிலச் செயலாளர் பெ.  சண்முகத்திடம் கட்சியின் மாவட்டத் தலைவர் கள் வழங்கினர். அதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பெ. சண்முகம் பேசியதாவது:

வரலாறு தெரியாத ஒன்றிய ஆட்சியாளர்கள்

‘சமக்ர சிக்ஷ அபியான்’ திட்டத்தின் அடிப் படையில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய  ரூ. 2,152 கோடியை வழங்க முடியாது என்று,  ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல் வது சட்டவிரோதமானது, அது வன்கொடு மைக்கு ஈடான ஒரு செயல். இந்தி பேசாத மாநிலங்கள் விரும்புகிற வரை  இந்தி மொழி திணிக்கப்படாது என்கிற வாக்குறு தியை இந்திய நாடாளுமன்றம் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கி இருக்கிறது. ஒருவேளை அந்த வரலாறு எல்லாம் பாஜகவினருக்கோ, அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தெரியவில்லை  என்று சொன்னால் அதைத் தேடிப் படிக்க வேண்டும்.  இன்று ஒன்றிய கல்வி அமைச்சரின் பேச்சுக்கு  தமிழகமே கொதித்தெழுந்து கொண்டிருக் கிறது. உண்மையில் கல்வியை, யார் அரசியல்  ஆக்கினார்கள்? பாஜக அரசாங்கம் அரசியல்  ஆக்கியதா? தமிழ்நாடு அரசு அரசியலாக்கியதா?  இவ்வளவு காலமும் கல்வி நிதி வந்து கொண்டு  தானே  இருந்தது! கல்விக்கு நிதி கொடுக்க  முடியாது என கூறி, அதனை மக்கள் மத்தியில்  கொந்தளிப்பான ஒரு பிரச்சனையாக மாற்றிய தற்கு யார் காரணம், ஒன்றிய பாஜக அரசு தான்  காரணம். நாங்கள் சொல்வதைக் கேட்டுத் தான் தீர  வேண்டும் என ஒன்றிய அரசு சொல்வதற்கு, இந்திய அரசியல் சாசனம் அப்படிப்பட்ட அதி காரம் எதையும் ஒன்றிய அரசுக்கு வழங்க வில்லை. இது ஒன்றிய அமைச்சருக்கும், அண்ணாமலைக்கும் தெரியும்.  தெரிந்தேதான் தமிழ்நாட்டு மாணவர்களு டைய கல்வி வாய்ப்பை பறிக்க வேண்டும்,  சரிவை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத் தோடு திட்டமிட்டு இந்த நிதியை தர மாட்டோம்  என்று பிடிவாதமாக மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலே இவ்வளவு பெரிய எதிர்ப்பு  வந்ததற்கு பிறகும், இன்றைக்கு ஒரு கடிதத்தை  ஒன்றிய அமைச்சர் அனுப்புகிறார் என்றால்,  ஒன்றிய அரசாங்கம் தமிழ்நாட்டு அரசாங்கத்தோ டும், தமிழ்நாடு மக்களோடும் ஒரு மூர்க்கத்தன மான மோதலுக்கு தயாராகிக் கொண்டிருக் கிறார்கள் என அர்த்தம்.  

மிகப்பெரிய போராட்டத்தைநோக்கி நாம் செல்ல வேண்டும்

இந்த சூழ்நிலையில் ஒன்றிய அரசாங்கத் திற்கு பாடம் புகட்டுகிற வகையில் தமிழ்நாடு கிளர்ந்து எழுந்தது என்று சொல்லக்கூடிய வகை யில் திமுக தலைமையில் பெரிய போராட்டத்திற் கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டிய அவசியம் இருக்கின்றது என்பதை  முதல்வருக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். கல்விக்கு நிதி ஒதுக்க மறுக்கும் ஒன்றிய  அரசுக்கு எதிராக தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிற நிலையில், இதனை மடை மாற்ற அண்ணாமலை முயற்சிக்கிறார் என்பதை  உணரவேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

 திசைத் திருப்பலுக்கு இரையாகி விடக் கூடாது

தமிழகம், ஒன்றிய அரசுக்கு எதிராக  கிளர்ந்தெழுவதை அவர்கள் விரும்பவில்லை. கடந்த இரண்டு நாட்களாக அண்ணாமலை செய்து கொண்டிருப்பது, அந்த திசைத்திருப் பும் அரசியலைத் தான். இது பாஜக-வை பாது காக்கக் கூடிய அரசியல். அதற்கு நாம் இரையாகி  விடக் கூடாது. ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக எவ்வளவு வீரியமிக்க போராட்டத்தை நடத்த முடியுமோ அதற்கான முயற்சியில் திமுக ஈடு பட வேண்டும். இந்த பிரச்சனைகளில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய லட்சக் கணக்கான ஊழியர்களை களத்திலே இறக்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு பெ.சண்முகம் கூறினார். உடுமலை துரையரசன் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜெயலலிதாவின்  1526 ஏக்கர் நிலத்தை ஏழைகளுக்கு பிரித்துத் தர வேண்டும்!

“கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பேரில் இருந்த 27 கிலோ தங்க- வைர நகைகள் மற்றும் 1526 ஏக்கர் நிலம் தொடர்பான ஆவ ணங்களை தமிழக காவல் துறை அதிகாரிகள் கொண்டு வந்திருக்கின்றனர். ஜெயலலிதா பெயரில் இருக்கக்கூடிய இந்த நிலங்கள் எங்கு  இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும், அந்த நிலங்கள் அனைத்தையும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். அந்த 1526 ஏக்கர் நிலங்களை லட்சக் கணக்கான வீடு இல்லாத ஏழைகளுக்கு, ஆளுக்கு 3 சென்ட் விகிதம் வழங்குவதற்கு நடவ டிக்கையினை மேற்கொள்ள வேண்டும்”  என்றும்  கோயம்புத்தூர் பொதுக்கூட்டத்தில் பெ. சண்முகம் வலியுறுத்தினார்.

அம்பேத்கருக்கு கோவையில் சிலை நிறுவ வேண்டும்!

“இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை வடிவமைத்த சிற்பி டாக்டர் அம்பேத்கருக்கு நாடு  முழுவதும் சிலை உள்ளது. ஆனால் கோவை  மாநகரத்தில் மட்டும், மக்கள் பார்வைக்குப் படாமல் ஒன்றிய அரசின் உணவு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், கோவை மாநக ரிலேயே டாக்டர் அம்பேத்கரின் சிலையை நிறுவ  வேண்டும் என்ற கோரிக்கை வைத்தும், அது நீண்ட நாட்களாக கிடப்பிலேயே இருக்கிறது. எனவே, கோவை மாநகராட்சி நிர்வாகம் உடனடி யாக டாக்டர் அம்பேத்கருக்கு சிலை வைப்பதற் கான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.  இதேபோன்று, கோவை பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு 45 ஆண்டுகளுக்கு மேலாக இழப்பீடு முழு மையாக வழங்கப்படாமல் இருக்கிறது, அதை  வழங்குவதற்கான நடவடிக்கையினை மேற் கொள்ள வேண்டும். இப்படி தமிழகம் முழுவதும் ஏராளமான கோரிக்கைகள் இன்னும் அப்படியே இருக்கிறது.  திமுக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதி கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். அதுதான் அடுத்த சட்டமன்ற தேர்தலில் நூறு சதவிகிதம் திமுக அணியின் வெற்றியை உறுதி  செய்யும்” என்றும் பெ. சண்முகம் தெரிவித்தார்.