tamilnadu

img

கொரோனா ஓயவில்லை; குழந்தைகளை நினைத்தால் கவலையாக இருக்கிறது: டெட்ராஸ்

ஜெனீவா, ஏப்.28- கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஓய வில்லை; குழந்தைகளை நினைத்தால் கவ லையாக இருக்கிறது என உலகச் சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

உலகம் முழுதும் கொரேனா தொற்றால் இதுவரை 30 லட்சத்து 64 ஆயிரத்து 837 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 609 பேர் பலியாகியுள்ளனர். இது வரை 9 லட்சத்து 22 ஆயிரத்து 397 பேர் குண மடைந்துள்ளனர். அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 10 ஆயிரத்து 507 ஆக அதிகரித்துள்ளது, அங்கு பலி எண் ணிக்கை 56,803 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் உலகச் சுகாதார அமைப் பின் தலைமை இயக்குநர் டெட்ராஸ் அத னோம் கேப்ரியேசஸ், கொரோனா ஆப்பி ரிக்கா, ஆசிய நாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகளை நினைத்து கவலை யடைவதாகத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் “நமக்கு முன்னால் பெரும் தொலைவான பாதை தெரி கிறது, இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டியுள்ளது, இன்னும் தொற்றின் தாக்கம் ஓயவில்லை” என்றார்.

மற்ற நோய்களுக்கான தடுப்பு மருந்து களுக்கு 21 நாடுகளில் தட்டுப்பாடு எனவரும் செய்திகள் கவலையளிக்கின்றன. போலியோ, அம்மை, காலரா, மஞ்சள் காய்ச்சல் மற்றும் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக் கான தடுப்பு மருந்துகள் வருவது தாமத மாகியுள்ளதால் உலகளவில் சுமார் 13 மில்லி யன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணம் கொரோனாவால் எல்லைகள் மூடப் பட்டுள்ளதே ஆகும். துணை-சஹாரா ஆப்பி ரிக்க நாடுகளில் மலேரியா காய்ச்சல் நோய் கள் இரட்டிப்பாகும் அபாயம் உள்ளது, ஆனால் நாங்கள் சில நாடுகளுடன் சேர்ந்து அந்த நிலைமை வந்துவிடாமல் தடுக்கப் பாடு பட்டு வருகிறோம் என்றும் கூறினார்.

கொரேனா பரவிவரும் நிலையில், நாடு கள் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு முன் உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே விடுத்  துள்ள எச்சரிக்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டுமென பேரிடர் கால அவசர நிபுணர் டாக்டர் மைக் ரியான் எச்சரித்துள்ளார்.