பெய்ஜிங், பிப்.18- சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த சீன மருத்துவத்துறை யும், அரசும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியான வர்களின் எண்ணிக்கை 1,868 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,436 ஆக உள்ளது. வைரஸ் தாக்குதலின் வீரியம் தற்போது குறைய தொடங்கி இருப்ப தாக சீன தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலின் மையப்பகுதி யான வூகானில், பாதிப்பின் வேகம் கடந்த ஜன.28 அன்று 32.4 சதவீத மாக இருந்த நிலையில், பிப்.15 அன்று 21.6 சதவீதமாக குறைந் திருப்பதாக தெரிவித்துள்ளனர்.