பெர்லின்
உலக மிரட்டி வரும் கொரோனா வைரஸ் வளமிக்க ஐரோப்பா கண்டத்தை சின்னமின்னமாக்கி வரும் நிலையில், அக்கண்டத்திற்கு ஆறுதல் அளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வல்லரசு நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு 1 லட்சத்து 3 ஆயிரம் பேர் வீடு திரும்பியுள்ளனர். இந்த செய்தி ஐரோப்பிய மக்களுக்கு மட்டுமின்றி உலக மக்கள் அனைவருக்கும் ஒருவித தன்னம்பிக்கையை அளிக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்மனியைப் போன்று சீனா, தென் கொரியா, ஜப்பான், பெரு, ஆஸ்திரியா, சுவிஸ் போன்ற நாடுகள் அதிகளவிலான கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்தினாலும் ஜெர்மனியைப் போன்று விகித சாதனை படைக்கவில்லை. ஜெர்மனியில் இதுவரை 1 லட்சத்து 51 ஆயிரம் பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்து 354 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2 ஆயிரத்து 900 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.