tamilnadu

சிறார் ஆபாசப்படங்கள் பதிவேற்றம் போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

கோவை, ஜன. 5–  சிறார் ஆபாசப்படங்களை பதிவிட்ட கோவை  சூலூரைச் சேர்ந்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய் யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கோவை மாவட்டம் சைபர் கிரைம் போலீசார் சமூக வலைதளங்களை கண்காணித்தபோது சூலூரிலிருந்து சிறார் ஆபாசப் படங்களை பதிவிட்ட ஒரு நபர் சிக்கியுள்ளார். அவரது கணக்கை போலீசார் ஆராய்ந்தபோது சத்திய மூர்த்தி (25) என்ற நபர் தனது முகநூல் பக்கத்தில் சிறார்க ளின் ஆபாச படங்களை பதிவிட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ‌சூலூர்‌ காவல்நிலையத்தில் வழக்குப்‌ பதிவு செய்யப்பட்டது.  இதனைதொடர்ந்து காவல்துறையினர் விசாரணை செய்ததில், சம்பந்தப்பட்ட நபர்  சூலூரில்‌ உள்ள தனியார்‌ பொறியியல்‌ கல்லூரியில்‌ ஓட்டுநராக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. அவரிடமிருந்த கைப்பேசியைக் கைப்பற்றி ஆய்வு செய்த போது, அதில்‌ சிறார்களின்‌ ஆபாச படங்கள்‌ உட்பட பல ஆபாச படங்கள்‌ இருந்ததை உறுதிப்படுத்தினர். விசாரணையில் தனது அப்பா பெயர்‌ ராமசாமி என்றும்‌ தான்‌ கடந்த இரண்டு வருடங்களாக பொறியியல்‌ கல்லூரியில்‌ ஒட்டுநராக பணிபுரிந்து வருவதும், அவிநாசியில்‌ உள்ள போதம்பாளையத்தில்‌ வசித்து வருவதாக தெரிவித்தார். மேலும், தனது முக நூலில்‌ குழந்தைகளின்‌ ஆபாச படத்தை பதிவேற்றம்‌ செய்த தையும் ஒப்புக்கொண்டார்‌. இதன் பின்னர் சத்தியமூர்த்தி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இது தொடர்பாக கோவை மாவட்ட காவல்‌ கண்காணிப் பாளர்‌ சுஜித்குமார் கூறுகையில்‌, இவ்வாறான குழந்தைகள்‌ தொடர்பான ஆபாச புகைப்படம்‌ மற்றும்‌ வீடியோக்களை வைத்திருப்போர்‌ மற்றும்‌ சமூக வலைத்தளங்களில்‌ பதி விடுவோர்கள்‌ பற்றிய விவரங்கள்‌ சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும், விரைவில்‌ மேற்படி  நபர்களும்‌ சட்டப்படியான நடவடிக்கைக்கு உட் படுத்தப்படுவார்கள்‌ என எச்சரித்‌துள்ளார்‌.