உடுமலை, அக். 18- உடுமலையில் பெய்த மழையால் வட்டாட்சியர் அலுவலகம் வெள்ளத் தில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் பர வலாக மழை பெய்து வருகிறது. இந்நி லையில், திருப்பூர் மாவட்டம், உடு மலை நகரில் பெய்த மழையால் வட் டாட்சியர் அலுவலக வளாகம் முழுவ தும் மழை நீர் சூழ்ந்தது. இதனால் அலு வலகத்தில் இருந்து ஊழியர்கள் உள் ளிட்டோர் வெளியே வர முடியாமல் மிகவும் அவதிக்கு உள்ளாகினர். முன்னதாக வெள்ளியன்று முற்பக லில் இவ்வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பல் வேறு நல திட்டங்களை வழங்கினார். இந்நிலையில் பிற்பகலில் பெய்த மழை யால் அலுவலகத்தினுள் இருந்த ஊழி யர்களும் மற்றவர்களும் வெளியே வரமுடியாமல் சிறைபிடிக்கப்பட்ட னர். கடந்த சில வாரங்களுக்கு முன் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத் தில் அடிப்படை வசதிகள் எதுவும் செய் யாமல் உள்ளதால் பொது மக்கள் உள் ளிட்ட ஊழியர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகிறார்கள் என்று தீக்கதிரில் செய்தி வெளியானது. இந்நிலையில் வெள்ளியன்று பெய்த மழை இதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.