கோவை, டிச. 10 – மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் சுற்றுசுவர் இடிந்து பலியான 17 பேருக்கு, தமிழக அரசு அறிவித்த நிவாரண தொகையை விரைந்து வழங்கு மாறு பாதிக்கப்பட்டவர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மேட்டுப்பாளையம் அருகே நடூர் ஏடி காலனியில் கடந்த டிச.2 ஆம் தேதியன்று 20 அடி சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதனைத் தொடர்ந்து சுவரின் உரிமையாளர் சிவசுப்பிரமணி யன் கைது செய்யப்பட்டார். இதனிடையே இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்க ளுக்கு ரூ.10 லட்சம் நிவாரண மாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதில் முதல்கட்டமாக ரூ.4 லட்சம் வழங்கப்பட்ட நிலையில் மீதம் உள்ள ரூ.6 லட்சம் இன்னும் வழங்கப்படவில்லை. கடந்த வாரம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணை யத்தினர் சம்பவ இடத்தை பார்வையிட்ட பின் செய்தியா ளர்களிடம் கூறுகையில், வழங் கப்படாமல் மீதமுள்ள ரூ.6 லட் சத்தை உடனே வழங்கவும், அரசு வேலை ஒரு வாரத்தில் வழங்க வும் தமிழக அரசிற்கு வலியு றுத்தப்படும் என தெரிவித்தி ருந்தனர். ஆனால், தற்போது வரை அறிவிக்கப்பட்ட மீதமுள்ள ரூ.6 லட்சம் வழங்கப்பட வில்லை, இதேபோல் பாதிக் கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த வர்களுக்கு தகுதிக்கேற்ற அரசு வேலை என்கிற முதல்வரின் வாக்குறுதியும் நிறைவேற்றப் படவில்லை. இதுகுறித்து சமூக ஆர்வ லர்கள் கூறுகையில், “தமி ழக அரசு அறிவித்த ரூ.10 லட் சத்தில் 11 பேரின் குடும்பங்க ளுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்பட் டுள்ளது. மீதம் உள்ள 6 குடும் பங்களுக்கு அந்த ரூ.4 லட்சம் தற்போதுவரை வழங்கப்பட வில்லை. மீதமுள்ள ரூ.6 லட்ச மும், முதல் கட்டமாக வழங்கப்ப டாத குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும் விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். அதேபோல் இதில் பலியான வர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண் டும்,” என தெரிவித்தனர்.