கோவை, மார்ச் 15 - தமிழகம் முழுவதும் கொரோனோ வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் சுகாதாரமற்ற டாஸ்மாக் மதுபான கூடத்தில் குவியும் மதுப்பிரியர் களால் தொற்று ஏற்படும் என்பதை அரசு அறியாமல் இருப்பது சமூக ஆர்வலர்களிடையே அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனோ வைரஸ் தற் போது உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இதில் இந்தியாவை பொறுத்தவரை கொரோனோ வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட் டோர் சிகிச்சை பெற்று வருகின்ற னர். கொரோனா வைரஸ் பரவுத லைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் பல்வேறு வழிகாட் டுதல்களை வழங்கியுள்ளது. மத்திய அரசு கொரோனோ வைரஸ் தாக்கு தலை தேசிய பேரிடராக அறிவித் தது. தமிழகத்தை பொறுத்தவரை விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பிற மாநில எல்லை யோரங்களில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் வழிபாட்டுத் தலங்கள், வணிக வளா கங்கள், பேருந்துகள், ரயில்களில் கிருமி நாசினிகள் மற்றும் நுண்மக் கொல்லி திரவங்கள் தெளித்து சுத் தம் செய்யும் பணிகள் முடுக்கிவி டப்பட்டுள்ளது. மழலையர் மற்றும் துவக்கப்பள்ளிகள், எல்லையோர மாவட்டங்களில் உள்ள திரைய ரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் ஆகியவற்றை மார்ச்-31 ஆம் தேதி வரை விடு முறை எனவும், மூடவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட இடங்கள் ஆகியவற்றில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள தனி அலுவலர்களை நியமிக்கவும், வழிபாட்டு தலங்க ளில் நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சளி, இருமல், காய்ச் சலுடன் வருபவர்களை கண்ட றிந்து, அவர்களை மக்கள் கூடும் இடங்களுக்கு வருவதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுகாதார துறைக்கு உத்தரவி டப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் வந்துபோகும் டாஸ் மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களில் தூய்மை பணிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள் வது குறித்து அரசு கவனம் செலுத்தா தது அதிருப்தியை ஏற்படுத்தியுள் ளது. நோய் தாக் குதல் அச்சுறுத் தல் ஏற்பட்டுள்ள நிலையில் கூட தமிழக அரசு டாஸ்மாக் மது பான கடைகளை வருவாய் ஈட்டித் தரும் இயந்திர மாக கருதுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட் டுகின்றனர். தூய்மை நடவடிக்கைக ளிலும் மதுபானக் கடைகள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர் கள் கூறுகையில், மக்கள் கூடும் பொது இடங்களில் மிகவும் மோச மான நிலையில் உள்ள இடங் களை கணக்கெடுத்தால் பொதுக்க ழிப்பிடங்களுக்கு அடுத்தப்படியாக டாஸ்மாக் பார்கள் இருக்கும். அதிக வருவாய் ஈட்டித்தருவதால் சுகாதார சீர்கேடுகள் குறித்து கண்டும் காணா மல் தமிழக அரசு உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை களிலும் இதே நிலைதான் தொடர்கிறது. தினசரி 500 முதல் 1000 வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் பார்கள் மற்றும் கடைக ளில் கிருமிநாசினி தெளிப்ப தற்கு இதுவரை எந்தவொரு நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்கள் அதிகளவில் கூடும் இடங்களை மூடச்சொல்லி அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் கவனத் தில் எடுத்து கொள்ளப்படவில்லை. கொரோனா தாக்குதலை உலகமே எதிர்கொள்ள முடியாமல் திணறி வரும் இந்த சூழலிலாவது டாஸ் மாக் மதுபான கடைகளை வருவாய் ஈட்டும் இயந்திரமாக பார்க்காமல் வாடிக்கையாளர்கள், ஊழியர் கள் மற்றும் அவர்களின் குடும்பத்தி னரின் நலனைக் கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.