சைனிக் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு
உடுமலை, செப். 22- உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 2020-2021 ஆம் கல்வியாண்டில் 6 மற்றும் 9 ஆம் வகுப்பு களில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து உள்ளதாக பள்ளி முதல்வர் விடுத்த செய் திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். மத்திய பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் இணைந்து நடத்தும் சைனிக் பள்ளி CBsE பாடதிட்டத்தை கொண்ட உண்டு உறைவிட பள்ளி திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டை அருகில் உள்ள அமராவதி நகரில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2020- 2021 ஆம் கல்வியாண்டில் 6 மற்றும் 9ம் வகுப்பு களில் சேர்வதற்கு 5 .1.2020 அன்று நுழைவுத்தேர்வு நடைபெற இருக் கிறது. இப்பள்ளியில் சேர்ந்து படிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதியில் இருந்து விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பிக்கும் காலம் 10.10.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளி முதல் வர் விடுத்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
துப்புரவு தொழிலாளர்களுக்கு பணிப்பாதுகாப்பை உறுதிபடுத்திடுக
ஈரோடு,செப். 22- துப்புரவு தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என தூய்மை காவலர் ஒருங்கிணைப்புக்குழு வலியுறுத்திவுள்ளது. கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் கொடுமுடி தாலுகா க.ஒத்தகடை யில் ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட் டத்திற்கு விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ஆர்.சிவ லிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கே.சண்முகவள்ளி, போக்கு வரத்து சங்கத்தின் தலைவர் அமிர்தலிங்கம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடுமுடி தாலுகா செயலாளர் கனகவேல் சிறப்புரையாற்றி னார்.
தீர்மானங்கள்
இக்கூட்டத்தில், தூய்மை காவலர் களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.12 ஆயிர மாக வழங்க வேண்டும். தொற்றுநோய் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக்கொள்ள ஆறு மாதங்களுக்கு ஒரு முறை முழுமை யான மருத்துவ பரிசோதனை அரசு சார்பில் செய்ய வேண்டும். சீரடையும், வேலைக்கான கருவிகளும் அரசு வழங்க வேண்டும். ரூ.86 தினக் கூலிக்கு வேலை செய்து வருகிறோம். மூன்று மாதங்களுக்கு பிறகு தான் சம்பளம் தரப்படுகிறது. பிஎஃப், கிராஜுவிட்டி, இஎஸ்ஐ உள்ளிட்ட பணி பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும். பண்டிகைக்கால பொங்கல் சிறப்பு பரிசு தொகை வழங்கிட வேண்டும். மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரு கிற செப்.30 ஆம் தேதியன்று கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.
நிர்வாகிகள் தேர்வு
இதனையடுத்து சங்கத்தின் ஒன்றிய தலைவராக கே.வீரகுமார், செயலாளராக எம்.நவமணி, பொருளாளர் பி.தமிழ்கொடி, துணை தலைவராக வி.சாந்தி, துணை செய லாளராக எஸ்.கல்பனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.