கோவை, ஜன. 30– கோவையில் எல்.எஸ்.டி எனும் போதைப் பொருள் தடவிய அட்டை வில்லைகள் மற்றும் கஞ்சா கடத்தி வந்த இருவரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை சரவணம்பட்டியை சுற்றியுள்ள கல்லூரிக ளுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் வின்சென்ட் தலைமையில் செவ்வாயன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப் போது சத்தியமங்கலம் சாலையில் வந்த காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டபோது அதில் எல். எஸ்.டி எனும் போதை மருந்து தடவிய அட்டை வில்லைகள் மற்றும் ஒண்ணரை கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னையைச் சேர்ந்த குப்பன் மகன் ராஜேஷ் (32), என்பதும் திருவள்ளூர் மாவட்டம் குளத் தூர் சேர்ந்த ஜோசப் மகன் பிராங்கிளி (35) என்பதும் தெரியவந்தது. இவர்கள் எல்.எஸ்.டி மருந்து தடவிய அட்டை வில்லைகளையும், கஞ்சாவையும் கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து விநியோகம் செய்து வந்தது தெரியவந்தது. உடனடியாக இருவரையும் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து நீதிபதி முன்பு இருவரும் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.